சிவகங்கை மாவட்டத்திலுள்ள திருப்பாச்சேத்தி அரசு மேல்நிலை பள்ளி யில்1992 – 93 ம் வருடம் பிளஸ் 2 வகுப்பு படித்த முன்னாள் மாணவ மாணவியர், ஆசிரியர்கள் சந்திப்பு கூட்டம் நடைபெற்றது. சிறப்பு அழைப்பாளர் களாக தலைமை ஆசிரியர் ஜெயக்குமார், உதவி தலைமை ஆசிரியர் ராமநாதன்,வகுப்பு ஆசிரியர் அப்துல்ரஹீம் , இணை ஆசிரியர்கள்
நாச்சியப்பன், கிருஷ்ணானந்தம் ஆகியோர் கலந்துரையாடி மகிழ்ந்தனர்.
நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அனைவருக்கும் நினைவு பரிசு வழங்கப்பட்டது, மெரினா நாகராஜன் பழைய நினைவுகளை புதுப்பிக்கும் வகையில் கலகலப்பாக பேசினார். பின்னர் பல்வேறு போட்டிகள் நடந்தது. போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கப் பட்டது.
இறுதியில் குரூப் போட்டோ எடுத்துக் கொண்டனர்.