மன்னார்குடி.,

திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி அருகே தேவங்குடி கிராமத்தில் அமைந்துள்ள ஸ்ரீமகா காளியம்மன் ஆலயம் தொன்மை சிறப்புமிக்க ஸ்தலமாக விளங்கி வருகிறது. பல்வேறு சிறப்புக்குரிய இவ்வாலயத்தில் ஆண்டுதோறும் வைகாசி பெருவிழா 10 நாட்கள் நடைபெறுவது வழக்கம்.

இந்நாட்களில் தினசரி அம்மனுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனையும், இரவு பல்வேறு வாகனங்களில் அம்பாள் வீதி உலா காட்சி விமர்சையாக நடைபெற்று வருகிறது. இவ் விழாவின் ஒரு பகுதியாக இன்று காலை ஸ்ரீமகா காளியம்மனுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை நடைபெற்றது.

இதன் தொடர்ச்சியாக பக்தர்கள் பால் காவடி , செடில்காவடி உள்ளிட்ட பல்வேறு காவடிகள் எடுத்து வேண்டுதலை நிறைவேற்றினர். அதனை தொடர்ந்து திருவிழாவின் முக்கிய நாளான இன்று தீ மிதி திருவிழா வெகு விமர்சையாக நடைபெற்றது.

தேவங்குடி உள்ளிட்ட பல்வேறு கிராமங்களை சேர்ந்த சுமார் 500க்கும் மேற்பட்ட பக்தர்கள் தீமிதிகள் இறங்கி தங்களது வேண்டுதலை நிறைவேற்றினார்கள். அதனைத் தொடர்ந்து திரளான பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர்.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *