தென்காசி ஜூன் 4

தென்காசி மாவட்டம் தென்காசியில் அமைந்துள்ள தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழக பணிமனையின் முன்பாக தென்காசி பணிமனை தொழிலாளர் முன்னேற்ற சங்கம் சார்பாக கலைஞரின் 103 வது பிறந்தநாள் விழா சிறப்பாக கொண்டாடப்பட்டது

இந்நிகழ்ச்சியில் தென்காசி அரசு போக்குவரத்து கழக தொமுச செயலாளர் வல்லம் திவான் ஒலி தலைமை தாங்கினார் இந்நிகழ்ச்சிக்கு தென்காசி சட்டமன்ற உறுப்பினர் டாக்டர் கலை கதிரவன் மற்றும் தென்காசி தெற்கு மாவட்ட திமுக செயலாளர் வே. ஜெயபாலன் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டு திரு உருவப்படத்திற்கு மலர்தூவி மரியாதை செலுத்தியும் அங்கு வைக்கப்பட்டிருந்த தொமுச சங்கத்தின் விளம்பர பதாகையை தென்காசி சட்டமன்ற உறுப்பினர் டாக்டர் கலை கதிரவன் திறந்து வைத்து உரையாற்றினார்

இந்நிகழ்ச்சியில் தென்காசி நகர் மன்ற உறுப்பினர் சாதீர் மற்றும் மாவட்ட வர்த்தக அணி அமைப்பாளர் முத்துக்குமார் தென்காசி கிழக்கு ஒன்றிய செயலாளர் அழகுசுந்தரம் மற்றும் தொமுச பணிமனை தலைவர் இசக்கி அரசன் பொருளாளர் ஜோசப் ராஜ் தலைமை சங்க செயலாளர் மணிகண்டன் பொதுக்குழு சேர்மலிங்கம் கண்ணன் சிவசைலப்பன் . இருதயராஜ் மற்றும்சாஸ்தா ஆவுடை நாயகம்| செல்லப்பா கென்னடி கருப்பையா முருகேஷன் பொன்னு துரை சிவ சுப்பிரமணியன் சுடலை முத்து மற்றும் ஏராளமான போக்குவரத்துக் கழக ஊழியர்கள் மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டனர் . இந்நிகழ்வில் கலந்து கொண்ட அனைவருக்கும் இனிப்புகள் வழங்கப்பட்டு சிறப்பாக கொண்டாடப்பட்டது .

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *