திருவண்ணாமலை மாவட்டம், வந்தவாசி அடுத்த சி.ம.புதூர் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் குழந்தைகள் தின விழா வெகு விமர்சையாக நடைபெற்றது. இந்த நிகழ்விற்கு பள்ளி தலைமையாசிரியர் ஆர்.நம்பெருமாள் தலைமை தாங்கினார். பள்ளி மேலாண்மை குழு உறுப்பினர் தமிழ்ச்செல்வி, துணைத்தலைவர் துர்கா தேவி ஆகியோர் முன்னிலை வகித்தனர். கல்வியாளர் பொன்.சந்திரசேகரன் வரவேற்றார்.
சிறப்பு அழைப்பாளராக தெள்ளார் வட்டார கல்வி அலுவலர் கோ.குணசேகரன் பங்கேற்று குழந்தைகளுக்கு எதிர்காலத் தேவைகளை பற்றியும், குழந்தைகள் தின விழாவை பற்றியும் விளக்கினார். மேலும் பேச்சு , ஓவியம், கவிதை உள்ளிட்ட பல்திறன் போட்டிகளில் பங்கேற்ற மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது. மேலும் இல்லம் தேடி கல்வி தன்னார்வலர் தங்கம் வாழ்த்துரை வழங்கினார். மேலும் பள்ளி மேலாண்மை குழு உறுப்பினர்கள், பெற்றோர்கள் பங்கு பெற்றனர். இறுதியில் பள்ளி உதவி ஆசிரியை பாரதி நன்றி கூறினார்.
செய்தியாளர்: பா. சீனிவாசன் வந்தவாசி.