தலைமைச் செயலகத்தில், திமுக துணைப் பொதுச் செயலாளரும், நாடாளுமன்ற திமுக குழுத் தலைவருமான கனிமொழி கருணாநிதி தலைமையில் “சென்னை சங்கமம் – நம்ம ஊரு திருவிழா” நடத்துவது குறித்து ஒருங்கிணைப்பு அலுவலர்களுடனான ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.
இக்கூட்டத்தில் சுற்றுலா, பண்பாடு மற்றும் அறநிலையங்கள் துறை அரசு கூடுதல் தலைமைச் செயலாளர் டாக்டர் கே. மணிவாசன், இ.ஆ.ப., முதலமைச்சரின் செயலாளர் முனைவர் ம.ச.சண்முகம், இ.ஆ.ப., கலைபண்பாட்டுத்துறை இயக்குநர் ச.வளர்மதி, இ.ஆ.ப., செய்தி மற்றும் மக்கள் தொடர்புத் துறை இயக்குநர் மரு. இரா. வைத்திநாதன், இ.ஆ.ப., சுற்றுலாத் துறை ஆணையர் டி.கிறிஸ்துராஜ் இ.ஆ.ப., சென்னை மாநகராட்சி துணை ஆணையர் எம்.பிருத்திவிராஜ், இ.ஆ.ப. இசை மற்றும் கவின் கலைப் பல்கலைக் கழகத்தின் துணைவேந்தர் முனைவர் எஸ்.சௌமியா, தமிழ்நாடு இயல் இசை நாடக மன்றத்தின் உறுப்பினர் செயலாளர் விஜயா தாயன்பன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.