கடந்த ஏப்ரல் 23 ஆம் தேதி சட்டசபைக்கான தேர்தல் நடைபெற்றது. இந்த தேர்தலில் மதுராந்தகம் (தனி) சட்டமன்ற தொகுதிக்கு அதிமுக சார்பில் மரகதம்குமரவேல், திமுக சார்பில் அமுலு பொன்மலர், தமிழக வெற்றிக்கழகம் சார்பில் எழில் கேத்ரின், நாம் தமிழர் கட்சி சார்பில் ஜானகிராமன் உள்ளிட்டோர் போட்டியிட்டனர்.

இதில் அதிமுக சார்பில் 2021 -ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்று சட்டமன்ற உறுப்பினர் மரகதம்குமரவேல், கடந்த ஏப்ரல் மாதம் நடைபெற்ற 2026 ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலில் மீண்டும் அதிமுக சார்பில் போட்டியிட வாய்ப்பு வழங்கப்பட்டு மீண்டும் 2-வது முறையாக வெற்றி பெற்று சட்டமன்ற உறுப்பினர் ஆனார்.

2026 ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலில் தமிழக வெற்றிக்கழகத்தின் சார்பில் எழில் கேத்தரின், வேட்பாளராக அறிவிக்கப்பட்டு தமிழக வெற்றி கழகத்தின் தொண்டர்களுடன் தொகுதி முழுக்க பிரச்சாரம் செய்து 62090 வாக்குகள் பெற்று 2-வது இடம் பெற்றார்.

மதுராந்தகம் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் மரகதம் குமரவேல், தனது எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்ததையொட்டி மதுராந்தகம் தொகுதிக்கு இடைத்தேர்தல் நடைபெற உள்ளது. இதற்கான தேர்தல் பணிகளை தேர்தல் ஆணையம் தொடங்கியுள்ளது.

இந்த நிலையில் மதுராந்தகம் தொகுதியில் தமிழக வெற்றிக் கழகத்தின் சார்பில் போட்டியிட்டு 2 வது இடம் பெற்ற எழில் கேத்தரின் மீண்டும் இடைத்தேர்தலில் போட்டியிட அக்கட்சியின் தலைவரும் முதல்வருமான விஜய், வாய்ப்பு வழங்குவாரா..? என்பது கட்சி தொண்டர்களிடையே எதிர்பார்ப்பாக உள்ளது. அப்படி வாய்ப்பு வழங்கும் பட்சத்தில் வெற்றி வாய்ப்புகள் இருப்பதாக அரசியல் விமர்சகர்கள் தெரிவிக்கின்றனர்.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *