சச்சிதானந்த பன்னாட்டு பள்ளியில் ஜெர்மனி நாட்டு மாணவர்கள் கலந்து கொண்ட மரம் நடும் விழா


மேட்டுப்பாளையம் உதகை சாலையில் செயல்பட்டு வரும் சச்சிதானந்த ஜோதி நிகேதன் பன்னாட்டு பள்ளியில் மரம் நடும் விழா நடைபெற்றது. இதில், ஜெர்மனி எர்ஃபர்டில் உள்ள கொனிஜன் லூயி ஜிம்னாசியம் பள்ளியைச் சேர்ந்த மாணவர்கள் மேட்டுப்பாளையம் சச்சிதானந்த ஜோதி நிகேதன் பள்ளிக்கு கலாச்சார பரிவர்த்தனை ஒப்பந்தத்தின்படி வந்துள்ளனர்.

இவர்கள் இருபது நாட்களுக்கு மேலாக பள்ளியிலேயே தங்கி இருந்து தமிழ் மொழி கலாச்சாரம், இசை, நாட்டியம், உட்பட பல்வேறு கலைகள் பற்றி தெரிந்து கொள்ளும் பயிற்சியில் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில் பள்ளியின் சுற்றுச்சூழலை மேம்படுத்தும் விதமாக நூற்றுக்கும் மேற்பட்ட மரக்கன்றுகளை நட்டு வைத்தனர். நிகழ்ச்சியில் பள்ளிச் செயலர் சிந்தனை கவிஞர் டாக்டர் கவிதாசன், பள்ளி முதல்வர் டாக்டர் உமா மகேஸ்வரி, துணை முதல்வர் டாக்டர் சக்திவேல் உட்பட பள்ளி ஆசிரியர்கள் கலந்து கொண்டனர்

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *