772 வது நாளாக மீன் கம்பெனி அகற்றக்கோரி கிராம மக்கள் போராட்டம்.


தூத்துக்குடி மாவட்டம் ஓட்டப்பிடாரம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்டபொட்டலூரனி கிராமத்தில் உள்ள மூன்று மீன் கம்பெனிகளை மூட வேண்டும் இந்த கம்பெனியால் கிராம மக்கள் குடி இருக்க முடியவில்லை சுகாதாரம் இல்லை துர்நாற்றம் வீசுகிறது என்று கூறிபொட்டலூரனிகிராம மக்கள் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர் இந்த நிலையில் இன்று 772 வது நாளாக போராட்டம் நடைபெறுவதை முன்னிட்டு கிராம மக்கள் பரபரப்பாக போஸ்டர் அடித்து மாவட்டம் முழுவதும் கொட்டப்பட்டுள்ளது

தமிழக முதலமைச்சர் விஜய் அவர்களே பரந்தூர் மக்களுக்கு நீதி வழங்கியது போல பொட்டலூரணி கிராம மக்களுக்கும் நீதி வழங்குங்கள் என்று மாவட்டம் முழுவதும் போஸ்டர் ஒட்டப்பட்டுள்ளது இது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. தமிழகத்தில் ஆட்சி மாற்றம் ஏற்பட்ட பின்பு தமிழக வெற்றி கழகம் தமிழகத்தில் ஆட்சி செய்து வருகிறது.

இந்த நிலையில் ஓட்டப்பிடாரம் சட்டமன்ற தொகுதியில் சட்டமன்ற உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்ட மதன் ராஜா அமைச்சராகவும் உள்ள இவர் கண்டிப்பாக பொட்டலூரணி கிராமத்தில் உள்ள மீன் கழிவுகளை மூடப்படும் என்று கூறினார் கிராமத்துக்கு வருவதாகவும் கூறினார் ஆனால் நேரில் இதுவரை வரவில்லை ஆனால் மூடுவதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக மட்டும் கூறப்பட்டதாக கூறப்படுகிறது.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *