கும்பகோணம் ஹோஸ்ட் லயன்ஸ் லயன்ஸ் சங்க நிர்வாகிகள் பதவியேற்பு நிகழ்ச்சி மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா ஏ ஆர் ஆர் லைலா மஹாலில் நடந்தது.

இதில் பங்கேற்ற சிறப்பு விருந்தினராக லயனஸ் 324-2F- மாவட்டத்தின் முன்னாள் ஆளுநர் ஜே. கார்த்திக் பாபு புதிய நிர்வாகிகளை பதவியில் அமர்த்திப் பேசியது:
தனி நபர் ஓரிருவருக்குத்தான் உதவ முடியும்.லயன்ஸ் போன்ற சங்கங்கள் தான் ஒரு சமூகத்துக்கு உதவ முடியும் அதேபோல்கண் சம்பந்தப்பட்ட சிகிச்சைகளுக்கு லயன்ஸ் சங்கம் செயல்படுகிறது. இதை உலக சுகாதார நிறுவனம் பாராட்டிச் சான்று அளித்துள்ளது என்றார்

மாவட்டத் தலைவர் ஆர்.ரமேஷ், வட்டாரத் தலைவர் டி.பாலகிருஷ்ணன்,மாவட்ட பொறுப்பாளர்
காசி. பாலசுப்பிரமணியன், மண்டல பொறுப்பாளர் மாறன் உள்ளிட்டோர் வாழ்த்தி பேசினர்.
விழாவுக்கு நிகழ் தலைவர் எஸ்.ராகவன் தலைமை வகித்தார்.

புதிய தலைவர் எஸ்.ராகவன,, செயலர் டி.மாதவன், பொருளாளர் வி.சிவக்குமார் உள்ளிட்ட நிர்வாகிகள் பலர் பொறுப்பேற்றுக் கொண்டனர் .பயனாளிகளுக்கு தையல் இயந்திரம், ஏழு மாணவ, மாணவிகளுக்கு கல்வித்உதவித்தொகை உள்ளிட்ட நலத்திட்டங்கள் வழங்கப்பட்டது.

முன்னதாக கே எஸ் பாலசுப்பிரமணியன் வரவேற்றார். நிறைவில் செயலாளர் டி மாதவன் நன்றி கூறினார். இதில் சங்க இயக்குநர்கள், நிர்வாகிகள்,, உறுப்பினர்கள் பங்கேற்றனர்.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *