கோவை மாவட்டம் வால்பாறையில் தமிழக அரசால் தடைசெய்யப்பட்ட கஞ்சா விற்பனையை முற்றிலும் ஒழிக்க கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் உத்தரவிற்கிணங்க வால்பாறை காவல் ஆய்வாளர் ராமச்சந்திரன் தலைமையில் தீவிர நடவடிக்கை மேற்க் கொள்ளப்பட்டு வருகிறது

இந்நிலையில் நேற்று வால்பாறையில் உள்ள காமராஜர் நகர் பகுதியில் கஞ்சா விற்பனை செய்வதாக காவல் துறையினருக்கு கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில் அப்பகுதிக்கு விரைந்து சென்ற காவல் துறையினர் அங்கு குடியிருக்கும் தாஸ் என்ற மரியசூசை என்பவரின் மனைவி முத்து லட்சுமி வயது 40 என்பவரிடம் விசாரணை மேற்கொண்டு அவரிடமிருந்த ஒரு கிலோ 150 கிராம் கஞ்சாவை கைப்பற்றி அவரை கைது செய்த வால்பாறை காவல் துறையினர் வழக்கு பதிவு செய்து வால்பாறை குற்றவியல் நீதித்துறை நடுவர் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி கோவை மத்திய சிறையில் ஒப்படைத்தனர்

காவல் துறையினரின் இந்த துரித நடவடிக்கைக்கு பொதுமக்கள் பாராட்டு தெவித்துள்ள நிலையில் முற்றிலும் போதைப் பொருட்களை ஒழிக்க சம்பந்தப்பட்ட காவல்துறையினர் தொடர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர்

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *