கம்பம் நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையத்தில் சொட்டு மருந்து வழங்கும் முகாமினை துவக்கி வைத்த எம் எல் ஏ
தேனி மாவட்டம் கம்பம் நகர்ப்புற சுகாதார நிலையத்தில் கம்பம் சட்டமன்ற உறுப்பினர் பி.எல்.ஏ. ஜெகநாத் மிஸ்ரா மாவட்ட வருவாய் அலுவலர் ப ராஜகுமார் ஆகியோர் குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்தினை குழந்தைகளுக்கு வழங்கி முகாமை தொடங்கி வைத்தார்கள்.
தேனி மாவட்டத்தில் 5 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கான போலியோ சொட்டு மருந்து வழங்கும் முகாம் 902 மையங்களில் ஞாயிற்றுக்கிழமை நடைபெறுகிறது இதில் 86.634 குழந்தைகளுக்கு கூடிய சொட்டு மருந்து கொடுப்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது
இந்த நிகழ்வில் துணை இயக்குனர் சுகாதாரம் பணிகள் மரு வரதராஜன் பெரியகுளம் வருவாய் கோட்டாட்சியர் கவிதா தாசில்தார்கள் பெரியகுளம் மருதுபாண்டி வட்டார மருத்துவ அலுவலர்கள் கம்பம் முருகன் பெரியகுளம் கோமதி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்