சுரண்டையில் தமிழக வெற்றிக் கழகம் சார்பில் இலவச கண் பரிசோதனை முகாம்
225 பேருக்கு பரிசோதனை – 65 பேர் அறுவை சிகிச்சைக்கு தேர்வு
சுரண்டை, ஜூன் 28:
தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் மற்றும் தமிழ்நாடு முதலமைச்சர் ஜோசப் விஜய்யின் 52-வது பிறந்த நாளை முன்னிட்டு, தென்காசி மாவட்டம் சுரண்டையில் தமிழக வெற்றிக் கழகம் சார்பில், திருநெல்வேலி அரவிந்த் கண் மருத்துவமனை இணைந்து இலவச கண் பரிசோதனை முகாம் இன்று நடைபெற்றது.
இம்முகாம், தவெக பொதுச் செயலாளர் மற்றும் தமிழக அமைச்சர் புஸ்ஸி ஆனந்த், தென்காசி மாவட்ட பொறுப்பு அமைச்சர் ராஜீவ் ஆகியோரின் ஆலோசனையின் பேரில் நடைபெற்றது. முகாமிற்கு தமிழக வெற்றிக் கழகத்தின் மூத்த நிர்வாகி பரன்குன்றாபுரம் என்டிஎஸ் சார்லஸ் தலைமை வகித்து துவக்கி வைத்தார்.
நகரச் செயலாளர்கள் பி. கணேசன், அரவிந்த் ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஆலங்குளம் வடக்கு ஒன்றியச் செயலாளர் எம்பிவி கதிர்வேல் வரவேற்புரையாற்றினார்.
நிகழ்ச்சியில் மாவட்ட மகளிரணி அமைப்பாளர் சரஸ்வதி, இணை அமைப்பாளர் காளியம்மாள், இளைஞரணி நிர்வாகிகள் சுதன், தியாகராஜன், அழகையா, வழக்கறிஞர் வெங்கடேஷ் பாபு, தலைமை கழகப் பேச்சாளர் பாலமுருகன், ஒன்றிய இணைச் செயலாளர் லூர்து சாமி (எ) விஜி, பொருளாளர் ஜான்சன் ரமேஷ் மற்றும் நிர்வாகிகள் சிவா, சிவபெருமாள், கிருஷ்ணமூர்த்தி, மாதவன், காளிதாஸ் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
முகாமில் அரவிந்த் கண் மருத்துவமனையின் மருத்துவக் குழுவினர் மொத்தம் 225 பேருக்கு கண் பரிசோதனை மேற்கொண்டனர். இதில் 65 பேர் அறுவை சிகிச்சைக்கு தேர்வு செய்யப்பட்டு, அவர்களுக்கான சிகிச்சை ஏற்பாடுகள் செய்யப்பட்டன.
முன்னதாக, முதலமைச்சர் ஜோசப் விஜய்யின் பிறந்த நாளை முன்னிட்டு பள்ளி மாணவிகளுக்கு கல்வி உதவித்தொகை வழங்கப்பட்டதுடன், 520 பேருக்கு பல்வேறு நலத்திட்ட உதவிகளும் வழங்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.