தேனி மாவட்டம் கம்பம்–கம்பம் மெட்டு மலைச்சாலையில் நடைபெற்று வரும் சாலை சீரமைப்பு பணிகளை மாவட்ட கலெக்டர் இரா. வைத்திநாதன் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.
மலைச்சாலையின் 18-ஆவது கொண்டை ஊசி வளைவில் நெடுஞ்சாலைத்துறை சார்பில் நடைபெற்று வரும் சாலை மேம்பாட்டு பணிகள் குறித்து அவர் விரிவாக கேட்டறிந்தார். பணிகளின் முன்னேற்றம், தரநிலை மற்றும் பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்தும் அதிகாரிகளிடம் கலெக்டர் ஆலோசனை வழங்கினார்.


இந்த ஆய்வின்போது கோட்டப் பொறியாளர் குமணன், உதவி கோட்டப் பொறியாளர் வெங்கடேசன், உதவி பொறியாளர் வைரகுமார் மற்றும் முதல் நிலை அரசு ஒப்பந்ததாரர் ஏ.பி.ஏ. அப்துல் சமது உள்ளிட்ட நெடுஞ்சாலைத்துறை அலுவலர்கள் உடனிருந்தனர்.
மலைப்பாதை சாலைப் பணிகளை விரைந்து, தரமாக முடிக்க தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு கலெக்டர் அறிவுறுத்தியதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *