மதுராந்தகத்தில் மக்கள் ஆதரவு தொடரும் என எழில் கேத்தரின் உறுதி – மேல்மலையனூர் அங்காள பரமேஸ்வரி அம்மன் கோவிலில் சுவாமி தரிசனம்
செங்கல்பட்டு மாவட்டம் / மதுராந்தகம்:
மதுராந்தகம் தனி சட்டமன்றத் தொகுதியில் தமிழக வெற்றிக் கழகம் சார்பில் “விசில்” சின்னத்தில் போட்டியிட்டு 62,090 வாக்குகள் பெற்று இரண்டாம் இடத்தைப் பெற்ற வேட்பாளர் எழில் கேத்தரின், மேல்மலையனூர் அங்காள பரமேஸ்வரி அம்மன் கோவிலில் சுவாமி தரிசனம் செய்தார்.
தேர்தலில் குறிப்பிடத்தக்க வாக்குகளைப் பெற்றதையடுத்து, கட்சி நிர்வாகிகளுடன் கோவிலுக்கு வந்த அவர், அம்மனை வழிபட்டு ஆசி பெற்றார்.
பின்னர் செய்தியாளர்களை சந்தித்த எழில் கேத்தரின் கூறுகையில்,
“மதுராந்தகம் தொகுதி மக்கள் எங்களுக்கு வழங்கிய ஆதரவு மிகுந்த ஊக்கத்தை அளிக்கிறது. மக்கள் விருப்பத்தின் பேரில் மீண்டும் தீவிர அரசியல் பணியில் ஈடுபட உள்ளேன். தொகுதி மக்களின் வளர்ச்சிக்காக தொடர்ந்து களத்தில் இருப்பேன்,” என்றார்.
அவரின் இந்த அறிவிப்பு, மதுராந்தகம் அரசியல் வட்டாரத்தில் கவனத்தை பெற்றுள்ளது.