தாராபுரம் செய்தியாளர் பிரபு
செல்:9715328420
குண்டடம்,
திருப்பூர் மாவட்டம், தாராபுரம் வட்டத்திற்குட்பட்ட பெரியகுமாரபாளையம் பகுதியில் பொதுப்பாதையை பயன்படுத்துவது தொடர்பாக மகேஷ் (43), பழனிசாமி (38) மற்றும் பெருமாள்சாமி (76) ஆகியோருக்கிடையே வாக்குவாதம் ஏற்பட்டது.
வாக்குவாதம் முற்றி கைகலப்பாக மாறியதில், பழனிசாமி மற்றும் பெருமாள்சாமி ஆகியோர் இணைந்து மகேஷை தாக்கியதாக கூறப்படுகிறது. இதில் காயமடைந்த மகேஷ், தாராபுரம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.
இதுகுறித்து கிடைத்த புகாரின் அடிப்படையில், குண்டடம் காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.