தாராபுரம் செய்தியாளர் பிரபு
செல்:9715328420
குண்டடம் அருகே முண்டுவேலம்பட்டியில் நான்கு ஏக்கரா திடீர் தீ விபத்து; கிராம மக்கள் அதிர்ச்சி.
குண்டடம்,
திருப்பூர் மாவட்டம், குண்டடம் அருகே தாராபுரம் வட்டத்திற்குட்பட்ட முண்டுவேலம்பட்டி கிராமத்தில் இன்று திடீரென ஏற்பட்ட தீ விபத்தில் சுமார் 4 ஏக்கர் பரப்பளவிலான தென்னைத் தோப்பில் தீ பரவி, 5-க்கும் மேற்பட்ட தென்னை மரங்கள் எரிந்து சேதமடைந்தன.
முண்டுவேலம்பட்டி கிராமத்தைச் சேர்ந்த நாச்சிமுத்து என்பவருக்கு சொந்தமான தோட்டத்தில் இந்த தீ விபத்து ஏற்பட்டது. தீ பரவியதை கண்ட அப்பகுதி விவசாயிகள் உடனடியாக தாராபுரம் தீயணைப்பு மற்றும் மீட்புப் படையினருக்கு தகவல் தெரிவித்தனர்.
தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தீயணைப்பு வீரர்கள் தீ மேலும் பரவாமல் விரைந்து கட்டுப்படுத்தி அணைத்தனர். இதனால் அருகிலிருந்த மற்ற மரங்கள் மற்றும் தோட்டப் பகுதிகள் பெரும் சேதத்திலிருந்து காப்பாற்றப்பட்டன.
சம்பவ இடத்தை சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நேரில் ஆய்வு செய்தனர். தீ விபத்தில் பாதிக்கப்பட்ட விவசாயி, ஏற்பட்ட இழப்புக்கு அரசு உரிய இழப்பீடு வழங்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளார்.
இந்த திடீர் தீ விபத்தால் அப்பகுதி கிராம மக்கள் அதிர்ச்சியடைந்தனர். சம்பவம் தொடர்பாக குண்டடம் காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.