திருவாரூர்., ஜூலை 07
திருவாரூர் மாவட்டம் பேரளம் பேரூராட்சி
திருவாரூர்- மயிலாடுதுறை தேசிய நெடுஞ்சாலையில் அமைந்துள்ளது.தற்போது சென்னை -கன்னியாகுமாரி தொழிற்தட வழிச்சாலை பணிகள் நடைபெற்று வருகின்றன.
இதன் தொடர்ச்சியாக பேரளம் ரயில்வே கேட் போடப்படுவதால் நீண்ட நேரம் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இதனை தவிர்கும் வகையில் மேம்பாலம் அமைக்கப்பட்டது. இந்த நிலையில் தற்போது செயல்பட்டு வரும் ரயில்வே கேட்டை ரயில்வே நிர்வாகம் நிரந்தரமாக மூடி கீழ்பாலம் அமைக்கும் பணியை தற்போது தொடங்கி வருகிறது.
இதனால் பேரளம் கடைவீதி வழியாக செல்லும் பேருந்துகள் வரமுடியாத நிலை ஏற்படும் இதனால் வர்த்தகம் பாதிக்கபடுவதாக கூறி ரயில்வே துறையை கண்டித்து இன்று 200க்கும் மேற்பட்ட கடைகளை அடைத்தும் பேருந்து நிலையம் அருகே நாகை நாடாளுமன்ற உறுப்பினர் செல்வராஜ் தலைமையில் 100க்கும் மேற்பட்டோர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்த ஆர்ப்பாட்டத்தில் வர்த்தக சங்க தலைவர் கலைமோகன், திமுக பேரூர் செயலாளர் தியாகு ,bஇந்திய கம்யூனிஸ்ட் கட்சி நிர்வாக குழு உறுப்பினர் கெளதமன் உள்ளிட்ட அனைத்து கட்சியை சேர்ந்த ஏராளமானோர் பங்கேற்றனர்.