தூத்துக்குடி: பக்கீல் ஓடை விரிவாக்கப் பணிகளை ஆய்வு செய்த மேயர் ஜெகன்
தூத்துக்குடியில் மழைக்காலத்தில் பொதுமக்கள் பாதிக்கப்படாத வகையில் நடைபெற்று வரும் பக்கீல் ஓடை விரிவாக்கப் பணிகளை மாநகராட்சி மேயர் ஜெகன் நேரில் ஆய்வு செய்தார். பணிகள் திட்டமிட்டபடி 7 மீட்டர் அகலத்தில் நடைபெறுகிறதா என்பதை டேப் மூலம் அளந்து உறுதி செய்த அவர், தரத்தில் எந்த சமரசமும் இருக்கக் கூடாது என்றும், காலக்கெடுவுக்குள் பணிகளை முடிக்க ஒப்பந்ததாரருக்கு கடுமையாக உத்தரவிட்டார்.
மேலும், மழைக்காலத்திற்கு முன்பாக பணிகளை விரைந்து முடிக்கவும், மூன்றாம் ரயில்வே கேட் மேம்பாலம் மற்றும் இரட்டைப் பாலம் அருகே பணிகளை உடனடியாக தொடங்கவும் அறிவுறுத்தினார். பணிகளில் தாமதம் அல்லது விதிமீறல் ஏற்பட்டால் அதற்கான முழுப் பொறுப்பும் ஒப்பந்ததாரருக்கே என எச்சரித்தார். ஆய்வின்போது மாநகராட்சி அதிகாரிகள், மாமன்ற உறுப்பினர்கள் மற்றும் திமுக நிர்வாகிகள் உடனிருந்தனர்.