கம்பம், தேனி:

தேனி மாவட்டம் கம்பம் நகரில், அண்ணா திமுக உள்ளிட்ட பல்வேறு மாற்றுக் கட்சிகளைச் சேர்ந்த நூற்றுக்கும் மேற்பட்டோர் தமிழக வெற்றி கழகத்தில் இணைந்தனர்.

கம்பம் சட்டமன்றத் தொகுதி பொறுப்பாளர் பி.எல்.ஏ. ஜெகநாதன் மிஸ்ரா முன்னிலையில் நடைபெற்ற இந்த இணைப்பு நிகழ்ச்சியில், புதிய உறுப்பினர்கள் கட்சியில் தங்களை இணைத்துக் கொண்டனர்.

நிகழ்ச்சியில் தமிழக வெற்றி கழகத்தின் மாவட்ட, நகர மற்றும் ஒன்றிய நிர்வாகிகள் பலரும் கலந்து கொண்டு புதிய உறுப்பினர்களை வரவேற்றனர். கட்சியின் வளர்ச்சிக்காக அனைவரும் ஒருங்கிணைந்து செயல்பட உறுதி எடுத்ததாக நிர்வாகிகள் தெரிவித்தனர்.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *