சென்னையை அடுத்த மணலி புதுநகரை சேர்ந்த லாரன்ஸ் என்ற இளைஞர் தனது பிறந்தநாளில்நண்பர்களுக்கு மது வாங்கி கொடுத்து பார்ட்டி வைத்து மாதவரம் பால் பண்ணை பகுதியில் கொண்டாடியுள்ளார்
பின்னர் மாதவரம் பால் பண்ணை பகுதியில் குடித்துவிட்டு ஒவ்வொருவரும் வீட்டிற்கு சென்ற நிலையில்மாத்தூர் பகுதியில் ரத்தீஷ் என்ற இளைஞனை முகேஷ் என்ற இளைஞன் குடிபோதையில் தாக்கியுள்ளான்தாக்குதலுக்கு ஆளான ரத்தீஷ் நண்பர்களுக்கு போன் செய்து என்னை அடித்து விட்டதாக ஆள் திரட்டி உள்ளான்இதனை அடுத்து நண்பர்கள் ஆன. லாரன்ஸ் சசிகுமார் சந்தோஷ் உள்ளிட்ட ஏழு பேர் இருசக்கர வாகனத்தில் பட்டாகத்திகளுடன்மாத்துர் பகுதியில் முகேஷை கொலை செய்வதற்காக தேடி வந்தனர்
ஆனால் முகேஷ் எங்கு தேடியும் கிடைக்காததால் பட்டாக்கத்திகளை மறைத்து வைப்பதற்காக மணலி புதுநகர் பகுதிக்கு இருசக்கர வாகனத்தில் சென்றுள்ளனர்அப்பொழுது மணலி புதுநகர் பொன்னியம்மன் நகர் பகுதியில் வாகன தணிக்கையிலிருந்து மணலி புதுநகர் போலீசார் இவர்களை சோதனை செய்தபோது பட்டாக்கத்திகள் இருப்பது தெரியவந்தது
விசாரணையில் முகேஷ் என்ற இளைஞர்களை கொலை செய்வதற்காக சென்றது தெரியவந்ததை அடுத்து ஏழு பேரை கைது செய்து அவர்களிடமிருந்து பட்டாக்கத்திகளை பறிமுதல் செய்துள்ளனர்
மணலி புதுநகரை சேர்ந்த லாரன்ஸ் 23 மணலி மாத்துரை சேர்ந்த சசிகுமார் 20 மணலி பெரிய மாதுரை சேர்ந்த சஞ்சய் 23 மணலி சின்ன மாத்திரை சேர்ந்த கிருஷ்ண பிரசாத் 22
மணலி பெரிய மாதுளை சேர்ந்த சந்தோஷ் 21 மாதவரம் பால்பண்ணையை சேர்ந்த ரத்தீஷ் 23
மணலி பெரிய மாத்திரை சேர்ந்த விக்னேஷ் 24 மணலி மாத்தூரை சேர்ந்த நிதிஷ் 17
நபர்கள் TVS Jupiter 125 இருசக்கர வாகனத்தில் 8 பட்டா கத்திகளுடன் சென்றவர்களை கைது செய்தனர்