தாராபுரம் செய்தியாளர் பிரபு
செல்:9715328420
தாராபுரத்தில் அதிகாலையில் ஒருவருக்கு சரமாரியாக அருவாள் வெட்டு தாராபுரத்தில் பரபரப்பு.
தாராபுரம் ஜூலை: 8-
திருப்பூர் மாவட்டம் தாராபுரம் அருகே கணபதிபாளையம் பகுதியில் அமைந்துள்ள செட்டியார் தோட்டம் மில்லில் அதிகாலை 5 மணி அளவில் தங்கவேல் வழக்கம்போல் பால் வாங்க சென்றுள்ளார் அவர் மில்லில் இருந்து வெளியே வரும் போது அட்ரஸ் கேட்பது போல் சில பேர் கேட்டு அவரை சரமாரியாக கூர்மையான ஆயுதங்களால் வெட்டி உள்ளனர் அப்போது அவ்வழியாக வந்த நபர்களை பார்த்து கூலிப்படையினர் தப்பி ஓட்டம்.
இதில் வெட்டுப்பட்ட தங்கவேல் காயத்துடன் ரத்தம் சொட்ட சொட்ட லிப்ட்டு கேட்டு தாராபுரம் காவல் நிலையத்திற்கு சென்று நடந்த சம்பவங்களை கூறியுள்ளார் காவலர்கள் உடனே கோவை உள்ள தனியார் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர் இது குறித்து வழக்கு பதிவு செய்து சம்பவ இடத்திற்கு தாராபுரம் காவல் துறையினர் அவருடைய இல்லத்திற்கு சென்று பத்துக்கும் மேற்பட்ட காவல்துறையினர் சிசிடிவி பதிவுகளை ஆராய்ந்து நான்கு திசைகளிலும் காவல் துறையினரை முடுக்கி விட்டு தீவிரமாக தேடுதல் வேட்டையில் கொலை முயற்சியில் ஈடுபட்ட கூலிப்படையினரை தேடி வந்த வேளையில் சம்பவத்தை கேள்விப்பட்ட திருப்பூர் மாவட்டம் கண்காணிப்பாளர் சிருஷ்டி சிங் சம்பவ இடத்திற்கு 30க்கும் மேற்பட்ட காவலருடன் வந்து ஆய்வு செய்து வழக்கை கையில் எடுத்து விசாரித்து வரும் நிலையில் தாராபுரம் துணை கண்காணிப்பாளர் ஆய்வாளர் துணை ஆய்வாளர்கள் உள்ளிட்ட டீம் 50க்கும் மேற்பட்ட காவல்துறையினர் சம்பவ இடத்தை விசாரித்து
வருகிறார்கள்.
இது தொடர்பாக விசாரித்த பொழுது மூன்று பிரச்சனைகளுக்கு இவர் முன் நின்றுள்ளார் முதல் பிரச்சினையாக தேன்மலர் பள்ளி உரிமையாளர் தண்டபாணி ஹை கோர்ட் வக்கீல் முருகானந்தத்தை கொலை செய்த வழக்கில் முதல் சாட்சியாக இவர் உள்ளார் என்பதும் அடுத்து இவருக்கும் இவரது உறவினர் தண்டபாணிக்கு 40 ஏக்கரா இடப்பிரச்சனை நீண்ட நாட்களாக உள்ளதாகவும் மேலும் இவர் தொழில் நிலக்கடலை பருப்பு வியாபாரத்தில் கேரளாவைச் சார்ந்த நபர்களுடன் கொடுக்கல் வாங்கல் பிரச்சனை இருந்ததாகவும் இந்த சம்பவத்தில் ஈடுபட்டுள்ளார்களா என்பது குறித்தும் விசாரித்து வருகிறார்கள்.
மூன்று பிரச்சனைகளில் இவர் இருப்பதால் யார் இவர் மீது கொலை வெறி தாக்குதல் நடத்தி கொலை செய்ய முயற்சி செய்தார்கள் என்பது குறித்து முதல் கட்டமாக தணிப்படை அமைத்து விசாரித்து வருகிறார்கள். இந்த கொலையாளிகளை விரைவில் பிடித்து விடுவோம் என்று சபதம் ஏற்றுள்ள காவல் துறையினர் அனைத்து பகுதிகளுக்கும் தொலைபேசி தொடர்புகளை கையில் எடுத்தும் சிசிடிவி காட்சிகளை வைத்து குற்றவாளிகளை தேடி வருகிறார்கள் தொடர்ந்து சம்பவம் அவரது மில்லருகே நடுரோட்டில் நடந்ததால் சுற்றுவட்டார பகுதியில் இருக்கும் பொதுமக்கள் அச்சத்தில் உள்ளனர் தொடர்ந்து தாராபுரத்தில் பல வருடங்களாக கொலை சம்பவம் அதிகரித்து வருகிறது என்பதை குறிப்பிடத்தக்கது சம்பவம் நடந்த இடத்திற்கு கை ரேகை நிபுணர்கள் ராஜா என்கின்ற மோப்பநாய் உதவியுடன் தேடுதல் வேட்டையில் இறங்கி உள்ளனர்.