புவனகிரி ஜூலை 9
கடலூர் மாவட்டம் புவனகிரி வட்டம் வட தலை குளம் கிராமத்தில் வீட்டில் கள்ளத்தனமாக மது பாட்டில்களை பதுக்கி வைத்து விற்பனை செய்து வந்த நபரை பற்றி தனிப்பிரிவு காவலருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் மருதூர் உதவி ஆய்வாளர் செந்தில்குமார் தலைமையில் சிறப்பு உதவி ஆய்வாளர் சக்கரவர்த்தி தலைமை காவலர் சங்கர் ஆகியோர் அடங்கிய தனிப் படை அமைக்கப்பட்டு கள்ளத்தனமாக வீட்டில் பதுக்கி வைத்து விற்பனை செய்த சத்தியராஜ் வயது,(41) தந்தை பெயர் கருணாநிதி என்பவரை கைது செய்த போலீசார் வழக்குப்பதிவு செய்து அவர் பதுக்கி வைத்திருந்த மது பாட்டில்களை பறிமுதல் செய்து சிறையில் அடைத்தனர்