ராணிப்பேட்டை செய்தியாளர் வெங்கடேசன்
இராணிப்பேட்டை மாவட்ட முஸ்லீம் மகளிர் உதவும் சங்கத்தின் செயற்குழு மற்றும் பொதுக்குழு உறுப்பினர்கள் மற்றும், இஸ்லாமிக் வெல்பர் அசோசியேசன், நவல்பூர் சார்பில் ரூ.1,00,000/- மற்றும் இராணிப்பேட்டை எக்னாமிக் சேம்பர் (Ranipet Economic Chamber) சார்பில் ரூ.3,00,000/- ஆக மொத்தம் ரூ.4,00,000/- 2026-2027-ஆம் ஆண்டிற்கான நன்கொடை தொகை காசோலையாக இராணிப்பேட்டை மாவட்ட ஆட்சியர் ந.ப்ரியா ரவிச்சந்திரன் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் (09.07.2026) வழங்கப்பட்டது.
இந்நிகழ்வில் மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலர் த.மீனா, முஸ்லீம் மகளிர் உதவும் சங்கத்தின் செயலாளர் Z.அப்துல்லா, இணை செயலாளர் K.ஹயாத் பாஷா, கண்காணிப்பாளர் அ.ஷம்ஷாத் உள்ளிட்ட முஸ்லீம் அமைப்பினர் உடனிருந்தனர்.