துரிஞ்சிப்பட்டியில் வட்டார அளவிலான சிலம்பப் போட்டிகள்


தர்மபுரி மாவட்டம், பாப்பிரெட்டிப்பட்டி வட்டார அளவிலான சிலம்பப் போட்டிகள் துரிஞ்சிப்பட்டி அரசு மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் நடைபெற்றன. நிகழ்ச்சியில் கழக செயலாளர் ஆனந்த்குமார், இணைச் செயலாளர் செல்வநாதன் முன்னிலை வகித்தனர்.

சிறப்பு நடுவராக உடற்கல்வி ஆசிரியர் செல்வம் மற்றும் சரக ஒருங்கிணைப்பாளர் சக்திவேல் கலந்து கொண்டனர். இதில் பாப்பிரெட்டிப்பட்டி வட்டாரத்தைச் சேர்ந்த அரசு மற்றும் தனியார் பள்ளிகளைச் சேர்ந்த 230 ஆண், பெண் மாணவ, மாணவிகள் ஆர்வமுடன் பங்கேற்று தங்களது சிலம்பத் திறமைகளை வெளிப்படுத்தினர்.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *