குறிஞ்சிப்பாடி, ஜூலை 11,07,2026

கடலூர் மாவட்டம், குறிஞ்சிப்பாடி மற்றும் நெய்வேலி பகுதிகளில் இயங்கும் தனியார் பள்ளி வேன்களில் பயணம் செய்யும் குழந்தைகளின் பாதுகாப்பு கேள்விக்குறியாக உள்ளதாக அகில இந்திய மக்கள் உரிமைகள் பாதுகாப்பு கழகம் குற்றம் சாட்டியுள்ளது.

இது குறித்து அந்த இயக்கத்தின் நிர்வாகிகள் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது:

பல தனியார் பள்ளி வேன்களில் ஓட்டுநர் மட்டுமே இருந்து குழந்தைகளை இறக்கிவிடுகின்றனர். பெற்றோரிடம் நேரில் ஒப்படைக்காமல் சாலையோரத்தில் இறக்கிவிட்டு செல்வதால் விபத்து அபாயம் அதிகமாக உள்ளது.

மேலும் சில வேன்களில் கூடுதல் குழந்தைகளை ஏற்றுதல், GPS மற்றும் CCTV வசதி இல்லாமை, தகுதியான ஆயா இல்லாமை போன்ற குறைபாடுகள் உள்ளன. இது பள்ளிக்கல்வித்துறை மற்றும் மோட்டார் வாகன சட்ட விதிகளுக்கு எதிரானது.

எனவே கல்வி நிறுவனங்கள் உடனடியாக தலையிட்டு ஒவ்வொரு வேனிலும் பெண் ஆயா நியமித்தல், குழந்தைகளை பெற்றோரிடம் நேரில் ஒப்படைத்தல், வேன்களில் GPS, CCTV பொருத்துதல், RTO அனுமதி மற்றும் காப்பீடு உள்ளதா என சரிபார்த்தல் போன்ற நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.

குழந்தைகளின் பாதுகாப்பு என்பது அனைவரின் கடமை. இதில் எந்தவித சமரசமும் கூடாது என்றும் அவர்கள் வலியுறுத்தியுள்ளனர்

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *