தாராபுரம் செய்தியாளர் பிரபு
செல்:9715328420

குண்டடம்,

திருப்பூர் மாவட்டம் குண்டடம் காவல் நிலையத்திற்கு உட்பட்ட பகுதிகளில், திருப்பூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சிருஷ்டி சிங் தலைமையில் இன்று விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது.

முதலில் குண்டடம் காவல் நிலையம் எதிரே நடைபெற்ற நிகழ்ச்சியில், பெண்களுக்கு எதிரான குற்றங்கள், பெண்கள் பாதுகாப்பு, போக்சோ (POCSO) சட்டம் குறித்த விழிப்புணர்வை பொதுமக்களிடம் எடுத்துரைத்தார்.

மேலும், ஆன்லைன் மோசடிகள், கள்ளச்சாராயம், கஞ்சா உள்ளிட்ட போதைப்பொருட்களின் தீமைகள் மற்றும் அவற்றை தடுப்பதன் அவசியம் குறித்தும் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.

அதனைத் தொடர்ந்து, குண்டடம் காவல் நிலையத்தில் இருந்து தொடங்கிய விழிப்புணர்வு பேரணி, பொடாரம்பாளையம், குண்டடம் மாட்டுச்சந்தை உள்ளிட்ட முக்கிய சாலைகள் வழியாக சென்று, பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தியது. பின்னர் மீண்டும் குண்டடம் காவல் நிலையம் அருகே பேரணி நிறைவடைந்தது.

இந்த நிகழ்ச்சியில் காவல் துறையினர், பொதுமக்கள் மற்றும் பல்வேறு தரப்பினரும் கலந்து கொண்டு விழிப்புணர்வு பேரணியை சிறப்பித்தனர்.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *