கம்பம் ராம் ஜெயம் வித்யா மந்திர் மெட்ரிகுலேஷன் மேல்நிலைப் பள்ளி மாணவ மாணவிகளுக்கு சுற்றுச்சூழல் விழிப்புணர்வு

தேனி மாவட்டம் கம்பம் ராமஜெயம் வித்யா மந்திர் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி மாணவ மாணவிகளுக்கான சுற்றுச்சூழல் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது இந்த நிகழ்ச்சிக்கு ஈரோடு தொல்லியல் ஆய்வாளரும் இயற்கை ஆர்வலருமான எஸ் குலசேகரன் சிறப்பு விருந்தினராக பங்கேற்று மாணவ மாணவிகளுக்கு சுற்றுச்சூழல் பாதுகாப்பு இயற்கை வளங்களின் அவசியம் மற்றும் பாரம்பரியத்தைப் பாதுகாக்க வேண்டியதன் முக்கியத்துவம் குறித்து மாணவர்களுக்கு விரிவாக விளக்கி பேசினார்

இந்த நிகழ்ச்சியின் தொடக்கமாக மாணவ மாணவிகள் சுற்றுச்சூழல் பாதுகாப்பு உறுதிமொழி சான்றிதழ்களை வழங்கப்பட்டன. மேலும் 1 முதல் 12 ஆம் வகுப்பு வரையிலான மாணவ மாணவிகளுக்கு கேம்பஸ் க்ரானிக்கிள் – சுற்றுச்சூழல் விழிப்புணர்வு போட்டிகள் நடத்தப்பட்டு சான்றிதழ்கள் மற்றும் பரிசுகள் வழங்கப்பட்டன. பள்ளி தாளாளர் கவிதா சௌந்தர்ராஜன் பேசும் போது மாணவர்கள் சுற்றுச்சூழலை பாதுகாப்பதில் மாணவர்களின் பங்கு மிகவும் முக்கியமானது என்றும், ஒவ்வொருவரும் இயற்கையை நேசித்து பாதுகாப்பதை வாழ்வின் ஒரு பொறுப்பாகக் கடைப்பிடிக்க வேண்டும் என்றும் வலியுறுத்தி பேசினார்

இந்நிகழ்ச்சியில் பள்ளியின் மேலாண்மை இயக்குனர் கே ஆர் சௌந்தரராஜன் பள்ளி தாளாளர் கவிதா சௌந்தர்ராஜன் பள்ளி முதல்வர் ஸ்வாதிகா மற்றும் செயல் இயக்குநர் ராமன் கலந்து கொண்டு நிகழ்ச்சியை சிறப்பித்தனர்.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *