ஏற்றி வைத்த மணி தீபம் ஒளி மறைந்தது; ஆனால் உலகம் மறையும் வரை அவருடைய பாடல் ஒலி என்றும் மறவாது என்பதை வெளிக்காட்டும் விதமாக, கோவையைச் சேர்ந்த பிரபல குறுஞ்சித்தர ஓவியர் குனியமுத்தூர் யூ.எம்.டி ராஜா வினோதமான முறையில் தனது இசை அஞ்சலியைச் செலுத்தியுள்ளார்.
மறைந்த பழம்பெரும் பாடகி எஸ்.ஜானகி அம்மாள் அவர்களின் நினைவாக, ‘தினம் பாடும் தீபம்’ என்ற வாசகத்தோடு ஜானகி அம்மாளின் உருவப்படத்தை தத்ரூபமாக வரைந்துள்ள அவர், மெழுகு திரியில் பூக்களை வழி வைத்து ஒரு தனித்துவமான அஞ்சலியை நிகழ்த்தியுள்ளார். இசையுலகில் ஈடுசெய்ய முடியாத ஒரு பேரிழப்பாக அமைந்துள்ள இந்தத் தருணத்தில், ஜானகி அம்மாள் அவர்களை இழந்து வாடும் அவருடைய குடும்பத்தாருக்கும், ஒட்டுமொத்த இசை உலகிற்கும், திரை உலகிற்கும் தனது ஆழ்ந்த ஆறுதலையும் அனுதாபங்களையும் ஓவியர் யூ.எம்.டி ராஜா தெரிவித்துக் கொண்டுள்ளார்.