oplus_136314882

ஈரோடு மாவட்டம் அந்தியூர் புதுப்பாளையத்தில் உள்ள குருநாதசாமி கோவில் ஆடிப்பெரும் தேர் திருவிழா வரும் ஆகஸ்ட் மாதம் 12ந்தேதி முதல் 15ந்தேதி வரை நடக்கிறது. இந்தத் தேர் திருவிழாவில் தென்னிந்தி அளவில் பிரசித்தி பெற்ற கால்நடை மற்றும் குதிரை சந்தை நடைபெறும்.

நான்கு நாட்கள் நடக்கும் ஆடிப்பெரும் தேர்த்திருவிழாவில் லட்சக்கணக்கான பக்தர்கள் கலந்து கொள்வர். இங்கு கண்காட்சிக்காகவும் விற்பனைக்காகவும் கால்நடைகள் மற்றும் குதிரைகள் பல கோடி ரூபாய் மதிப்புள்ள ஆனவைகள் இங்கு கொண்டு வரப்படும். புதுப்பாளையம் கெட்டி சமுத்திரம் சங்கரா பாளையம் உள்ளிட்ட பகுதிகளில் நூற்றுக்கும் மேற்பட்ட ஏக்கரில் திருவிழாவிற்கான ஏற்பாடுகள் நடைபெறும்.

இந்நிலையில் இதற்கான முன்னேற்பாடுகள் குறித்து அந்தியூர் எம்எல்ஏ ஹரிபாஸ்கர் தலைமையில் குருநாதசாமி வனக் கோவில் பிரிவு பகுதியில் ஆலோசனை நடந்தது.

இதில் சுகாதாரத் துறை, கால்நடைத்துறை, வருவாய்த்துறை, காவல்துறை, உள்ளாட்சி நிர்வாகத்துறை உள்ளிட்ட அனைத்து துறை சார்ந்த அதிகாரிகளுடன் திருவிழாவிற்கான முன்னேற்பாடுகள் குறித்து ஆலோசனை செய்யப்பட்டது. இதில் பொதுமக்கள் மற்றும் பக்தர்கள் கால்நடைகளை காண ஒருவர் உள்ளிட்ட அனைவருக்கும் எந்தவித இடர்பாடும் இன்றி எளிதில் சாமி தரிசனம் செய்து, பொழுதுபோக்கு அம்சங்களை பார்த்துச் செல்லும் வகையில் அமைந்திட நடவடிக்கைகள் மேற்கொள்ள ஆலோசனை செய்யப்பட்டது.

இதில் அதிமுக ஒன்றிய செயலாளர்கள் சின்னமாற நாயக்கர், நாராயணன், நகரச் செயலாளர் மீனாட்சி சுந்தரம், ஒன்றிய அவைத் தலைவர் தேவராஜ், ஒன்றிய துணைச் செயலாளர் சண்முகானந்தம், வட்டார மருத்துவ அலுவலர் டாக்டர் சக்தி கிருஷ்ணன், டாக்டர் சதீஷ்குமார்,தாசில்தார் சக்திவேல், ஒன்றிய அலுவலக மேலாளர் சக்திவேல், கோயில் நிர்வாகிகள் குருராஜேஷ், நாகராஜ் உள்பட பலரும் கலந்து கொண்டனர்.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *