ஜம்மு & காஷ்மீர் மாநிலம், ஆனந்த் நகரில் கடந்த 26.06.2026 முதல் 30.06.2026 வரை நடைபெற்ற 39-வது அகில இந்திய அளவிலான ஜூனியர் ஆடவர் (19 வயதுக்கு உட்பட்ட) கயிறு இழுக்கும் போட்டியில், புதுவை மாநில கயிறு இழுக்கும் சங்கத்தின் சார்பில் 520 கிலோ எடைப் பிரிவில் பங்கேற்ற புதுச்சேரி அணி சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வெள்ளிப் பதக்கம் வென்று மாநிலத்திற்கு பெருமை சேர்த்தது.
இந்தச் சாதனையைப் பாராட்டும் வகையில், புதுவை மாநில கயிறு இழுக்கும் சங்கத்தின் தலைவர் மற்றும் புதுச்சேரி மாநில திமுக அமைப்பாளர் இரா. சிவா அவர்கள், வெற்றி பெற்ற புதுச்சேரி அணியினருக்கு சால்வை அணிவித்து பாராட்டி வாழ்த்து தெரிவித்தார்.
இந்நிகழ்வில், திமுக பொதுக்குழு உறுப்பினர் எஸ். கோபால், புதுவை மாநில கயிறு இழுக்கும் சங்கத்தின் செயலாளர் எம். சுந்தரமூர்த்தி, துணைச் செயலாளர் எஸ். பிரபாகரன், சங்க நிர்வாகி அ. அகிலன் மற்றும் பயிற்சியாளர்கள் எஸ். நந்தகோபால், கே. பிரசாந்த் ஆகியோர் உடனிருந்தனர்.