50 ஆண்டுகளுக்கும் மேலாக தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், இந்தி என பல மொழிகளில் 10,000-க்கும் மேற்பட்ட பாடல்களை பாடி கோடிக்கணக்கான மக்களின் மனதில் இடம் பிடித்தவர் அவர். “மலர்களே மலர்களே”, “செந்தூரப்பூவே”, “வெத்தலைய போட்டு” போன்ற பாடல்கள் இன்றும் நம் நினைவில் நீங்கா இடம் பெற்றுள்ளன.
அத்தகைய இசை ஞானியின் எஸ். ஜானகி மறைவையொட்டி, *கும்பகோணம் ஸ்ரீ அபிநயாஸ் கலைக் குழுமம் தனித்துவமான முறையில் அஞ்சலி செலுத்தியது.
கும்பகோணம் ஸ்ரீ அபிநயாஸ் கலைக் குழுமத்தின் பரதநாட்டிய மாணவிகள், மறைந்த பாடகி எஸ். ஜானகி அவர்கள் பாடிய புகழ்பெற்ற பாடல்களுக்கு பரதநாட்டியம் ஆடி தங்களது அஞ்சலியை சமர்பித்தனர்.
இசையும் நடனமும் கலந்த அந்த அஞ்சலி நிகழ்வு, அரங்கில் இருந்த அனைவரின் கண்களையும் கலங்க வைத்தது. ஒரு பாடகியின் குரல், மற்றொரு கலை வடிவமான நடனத்தின் மூலம் உயிர் பெற்றது போல் இருந்தது.
இந்த நிகழ்வில் கலை ஆசிரியர்கள், மாணவிகளின் பெற்றோர்கள் மற்றும் ஏராளமான கலை ரசிகர்கள் கலந்து கொண்டு, எஸ். ஜானகி அவர்களின் ஆத்மா சாந்தியடைய பிரார்த்தனை செய்தனர்.