பெரியகுளம், ஜூலை 13:
தேனி மாவட்டம், பெரியகுளம் நகராட்சி அலுவலக கூட்ட அரங்கில் 16-ஆவது மக்கள் தொகை கணக்கெடுப்புப் பணிக்கான பயிற்சிக் கூட்டம் நடைபெற்றது.
இப்பயிற்சிக் கூட்டத்தை மாவட்ட வருவாய் அலுவலர் பி. ராஜகுமார் நேரில் பார்வையிட்டு, பயிற்சி நடைபெறும் விதம் மற்றும் மேற்கொள்ளப்பட்ட ஏற்பாடுகளை ஆய்வு செய்தார். மேலும், மக்கள் தொகை கணக்கெடுப்புப் பணிகளை துல்லியமாகவும் சிறப்பாகவும் மேற்கொள்ள அதிகாரிகளுக்கு தேவையான அறிவுரைகளையும் வழங்கினார்.
இந்த ஆய்வின்போது பெரியகுளம் நகராட்சி ஆணையாளர் தமிஹா சுல்தானா மற்றும் அரசு அலுவலர்கள் பலர் உடனிருந்தனர்.