மதுரை.ஜூலை.14 –

தமிழ்நாடு மின்வாரிய ஒப்பந்த ஊழியர்கள் மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் எதிரே பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் செய்தனர்


மாவட்டத் தலைவர் சுபாஷ்சந்திரபோஸ், மண்டல செயலாளர் முத்துகிருஷ்ணன், தலைமையில்
மாவட்ட செயலாளர் மணிவாசகம், துணைச் செயலாளர் முத்துகிருஷ்ணன் முன்னிலையில் 200க்கும் மேற்பட்ட ஊழியர்கள் கடந்த 20 ஆண்டுகளுக்கு மேலாக ஒப்பந்த ஊழியராக பணி செய்வதாகவும் இரவு பகல் பாராமல் எந்த நேரத்தில் அதிகாரிகள் அழைத்தாலும் டிரான்ஸ்பரண்ட் ஏரி தங்கள் உயிரை பனையம் வைத்து வேலை செய்வதாகவும் இதனால் தங்களுடன் வேலை பார்த்த சில மின்சாரம் தாக்கி உயிரிழந்ததாகவும் இன்று அவர்களது குடும்பம் ஆதரவின்றி
கஷ்டப்படுகின்றனர்


எங்களைப் போன்றோர் வாழ்க்கை நடத்துவதற்கு அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை தமிழகத்தில் திமுக மற்றும் அதிமுக அரசுகள் மாறி மாறி ஆட்சி செய்தும் மின்வாரிய ஒப்பந்த ஊழியர்களின் நிலையை கண்டு கொள்ளவில்லை என்றும் இப்போது நடைபெற்றுக் கொண்டிருக்கும் தளபதி விஜய் ஆட்சியிலாவது எங்களுக்கு பணி நிரந்தரம் செய்து அரசு நேரடியாக எங்களது அக்கவுண்டுகளுக்கு பணத்தை அனுப்ப வேண்டும் பணி பாதுகாப்பு உறுதி செய்ய வேண்டும் மின்வாரிய ஒப்பந்த ஊழியர்களுக்கு அரசு சார்பில் இன்சுரன்ஸ் வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி 200க்கும் மேற்பட்டஊழியர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

எங்களின் கோரிக்கையை நிராகரிக்கப்பட்டால் மின்வாரிய ஊழியர்களை தமிழக அளவில் திரட்டி மாபெரும் ஆர்ப்பாட்டம் செய்யப் போவதாக தெரிவித்தனர். அதனைத் தொடர்ந்து மாவட்ட ஆட்சித் தலைவரை சந்தித்து கோரிக்கை மனு வழங்கச் சென்றனர்.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *