ஆகஸ்ட் மாதம் வரை குடிநீர் பிரச்சனை இருக்காது. மேயர் ஜெகன்.


தூத்துக்குடி மாநகர பகுதிக்கு வல்லநாட்டில் இருந்து குடிநீர் வருகிறது. வல்லநாடு ஆற்று படுகையில் நான்கு உரை கிணறுகள் அமைக்கப்பட்டு அதில் பம்பிங் செய்யப்பட்டு அதன் பிறகு சுத்தரிக்கப்பட்டு தூத்துக்குடி மாநகரில் உள்ள 60 வார்டுகளுக்கும் குடிநீர் வினியோகம் செய்யப்படுகிறது. இந்த நிலையில் கடந்த 10 நாட்களாக மாநகர் பகுதிக்கு குடிநீர் வினியோகம் பாதிக்கப்பட்டு இருந்தது. கடந்த ஐந்து வருடங்களுக்கு முன்பு மழை வெள்ளத்தால் தூத்துக்குடி மாநகருக்கு குடிநீர் வந்து கொண்டிருந்த இரண்டாவது பைப் லைன். மூன்றாவது பைப் லைன் மற்றும் உரைக்கிணறு. பம்பிங் ஸ்டேஷன் உள்ளிட்டவைகளை சேதமடைந்தது.

அதனை சரி செய்ய வேண்டும் என்று மேயர் ஜெகன் அப்போதைய தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் கவனத்திற்கு கொண்டு சென்ற பிறகு உள்ளாட்சித் துறை அமைச்சராக இருந்த கே என் நேரு உடனடியாக நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது. அதன் அடிப்படையில் 20 கோடி ரூபாய் மதிப்பில் நவீன முறையில் பம்பிங் ஸ்டேஷன் அமைக்கப்பட்டு எவ்வளவு வெள்ளம் வந்தாலும் பாதிக்காத வகையில் உயரமான வகையில் பில்லர் எழுப்பப்பட்டு அதன் மீது புதியதாக பைப் லைன் அமைக்கப்பட்டது. இந்த நிலையில் தொடர்ந்து குடிநீர் பிரச்சனையில் 100% மக்களுக்கு பாதிப்பு இல்லாத வகையில் குடிநீர் விநியோகம் செய்ய வேண்டும் என்ற எண்ணத்தில் மேயர் ஜெகன் மாநகர் பகுதி முழுவதும் வல்லநாடு பம்பிங் ஸ்டேஷனுக்கும் உறக்கினருக்கும் சென்று மேயர் ஜெகன் பார்வையிட்டு பணிகளை துரிதப்படுத்தினார்.

அதன் அடிப்படையில் இரண்டாவது பைப் லைன் 100 சதவீதம் பணிகள் முடிந்து தற்போது இரண்டாவது பைப் லைன் மூலம் மாநகர் பகுதிக்கு குடிநீர் வந்து கொண்டிருக்கிறது அதுபோல மூன்றாவது பைப் லைன் தற்போது பராமரிப்பு பணிகள் நடைபெற்று வருகிறது அந்தப் பணிகளும் 10 நாட்களில் முடிந்து விடும். மாநகராட்சி மேயர் ஜெகனின் கனவுத் திட்டமான 24 மணி நேரம் குடிநீர் வழங்கும் திட்டம் எப்படியும் நிறைவேற்ற வேண்டும் என்ற எண்ணத்தில் அடுத்த கட்டத்திற்கு சென்று அதற்கான பணிகளை மேற்கொண்டு வருகிறார்.

தற்போது வல்லநாடு ஆற்றுப்படுகையில் நீர் வரத்து இல்லாத காரணத்தினாலும் கோடை மழை சரிவர பெய்யாத காரணத்தினாலும் வல்லநாடு ஆற்று படுகையில் தற்போது நீர் இல்லாத சூழ்நிலையிலும் பல்வேறு வகையில் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு தற்போது தினசரி மாநகர் பகுதிக்கு குடிநீர் வழங்கப்பட்டு வருகிறது குடிநீர் தாமதமான பகுதிகளுக்கு இரண்டு நாட்களில் தொடர்ந்து வழக்கம் போல் குடிநீர் வினியோகம் செய்யப்பட உள்ளது. தற்போது உள்ள சூழ்நிலையில் வரும் ஆகஸ்ட் மாதம் வரை தூத்துக்குடி மாநகர் பகுதிக்கு குடிநீர் பிரச்சனையில் எதுவும் இருக்காது மாநகர் மக்களுக்கு குடிநீர் தங்கு தடை இன்றி வழங்கப்படும் என்று மேயர் ஜெகன் தெரிவித்துள்ளார். அதன் பிறகு மழைக்காலம் தொடங்கி விடும் அதனால் தூத்துக்குடி மாநகர் பகுதிக்கு குடிநீர் தட்டுப்பாடு இன்றி குடிநீர் வினியோகம் செய்யப்பட உள்ளது

கடந்த 10 நாட்களாக குடிநீர் தாமதம் ஏற்பட்டதை வைத்து சில அரசியல் கட்சியினர் அரசியல் செய்ய முன் வந்தனர். உடனடியாக மாநகர மக்களுக்கு ஒரு வேண்டுகோள் விடுத்தார் வருகிற 10-ஆம் தேதி குடிநீர் பிரச்சனை முழுவதும் சரி செய்யப்பட்டு மாநகர மக்களுக்கு குடிநீர் வழங்கப்படும் என்று மேய ஜெகன் அறிவித்தார் அதன்படி கடந்த சனிக்கிழமை முதல் குடிநீர் வினியோகம் சீரான முறையில் வழங்கப்பட்டு வருகிறது. திமுக தலைவரும் அப்போதைய தமிழக முதலமைச்சருமான ஸ்டாலின் தனக்கு கொடுத்த வாய்ப்பை மாநகர மக்களுக்கு 100% முழுமையாக பணியாற்றுவேன் பணியாற்ற வேண்டும் என்ற எண்ணத்தில் மாநகராட்சி மேயர் ஜெகன் அதற்கான நடவடிக்கைகளை ஈடுபட்டு தற்போது அதனை நிறைவேற்றி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *