கூத்தாநல்லூர்., ஜூலை. 14

தமிழக உயர்கல்வித்துறை அமைச்சரும், திருவாரூர் மாவட்டத்திற்கான பொறுப்பு அமைச்சருமான விஸ்வநாதன் இரண்டு நாட்களாக திருவாரூரில் பல்வேறு அரசு நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டு வருகிறார்.

திருவாரூர் மாவட்டம் கூத்தாநல்லூர் வட்டம் சேகரை கிராமத்தில் 100க்கும் மேற்பட்ட பொதுமக்கள் 50ஆண்டுகளாக வசித்து வந்தனர். அந்த கிராம பொதுமக்கள் , மின் இணைப்பு, குடிநீர் இணைப்பு பெறப்பட்டுள்ளது.

இங்கு வசித்து வரும் மக்களுக்கு ரேஷன் கார்டு, ஆதார் கார்டு என அனைத்திலும் முகவரி உள்ளது. எனவே, இந்த வீடுகளுக்கு இலவச வீட்டுமனை பட்டா வழங்க கோரி மாவட்ட ஆட்சியர் உள்ளிட்ட அதிகாரிகளிடம் கோரிக்கை மனு அளித்து வந்தனர்.

இந்நிலையில் இன்று சேகரை கிராமத்தில் 87 பயனாளிகளுக்கு இலவச வீட்டு மனை பட்டா மற்றும் குடும்ப அட்டையை உயர் கல்வித்துறை அமைச்சர் விஸ்வநாதன் வழங்கினார். இந்நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியர் மோகனச்சந்திரன் மன்னார்குடி சட்டமன்ற உறுப்பினர் எஸ். காமராஜ் உள்ளிட்ட வருவாய்த்துறை அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர் .

அப்போது சம்பவ இடத்திற்கு வந்த சாந்தா என்கின்ற மூதாட்டி எனக்கு யாருமே இல்லை இருபதுக்கு மேற்பட்ட மனுக்கள் வழங்கியும் எனக்கு இலவச வீட்டு மனை பட்டா வழங்கவில்லை என கண்ணீர் மல்க அழுது புலம்பினார்.

இதை பார்த்து வருவாய்த்துறை அதிகாரிகள் சிரித்துக்கொண்டே பதில் அளித்தனர் . போமா அந்த பக்கம் உனக்கு வேலையில்லை ஒரு ஒரு அதிகாரிகளை பார்க்க சொல்லி கூத்தாநல்லூர் வருவாய் துறை அதிகாரிகள் சிரித்து கொண்டு விளையாடிய சம்பவம் பார்ப்போர் மத்தியில் மிகுந்த வேதனைக்குள்ளாக்கி வருகிறது.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *