கடலூர் மாவட்டம் வடலூர், காட்டுக்கொல்லையில் வாடகை வீட்டில் வசிப்பவர் எம்ஜிஆர் என்கிற
மூர்த்திசெல்வன் அச்சக பணியாளராக வாழ்க்கையை தொடங்கியவர், வேலை இழப்பு,வாழ்க்கையில் , இடையில் திடீரென தொழிலில் திடீர் மாற்றம் ஏற்பட்டு சைக்கிளில் கேன் , டீ, போட்டு விற்பனை செய்ய தொடங்கியவர் தான், இந்ததொழிலைக் கடந்த 30பது வருடங்களுக்கு மேலாக செய்து வருகிறார்.
இவருக்கு ஒரு மனைவியும் 2மகளும் உள்ளனர், 2,மகளுக்கும் திருமணம் ஆகி குழந்தை பிறந்து விட்டது,ஏழாவது வரையே படித்த இவர் தான் வடலூரில் அச்சகத்தில் வேலையில் சேர்ந்த இவர் அச்சகத்தில் அச்சு கோர்த்தல், பைண்டிங், அச்சகம் மெஷின் இயக்கம் பல்வேறு அச்சக பணிகளை செய்து வந்த நிலையில், அச்சகம் கம்ப்யூட்டர் மயமானது,கையால் அச்சிக்கோர்க்கும் தொழில்நுட்பம் மாறியதால் இவருடை வாழ்க்கையில் பேரிடி விழுந்தது ,திடீரென போதிய வருவாய் இல்லாத நிலையில் ஒரு மாற்றத்தை தேடியவருக்கு, புதிய யோசனை, புதியபாதை புதிய தொழிலாக சைக்கிள்மூலம் கேனில் டீ விற்பனை, இப்படித்தான் வாழ்க்கை தொடங்கியவர் தனது 30 ஆண்டுகளாக இந்த பணியை செவ்வனே செய்து வருபவர்,பகலெல்லாம் காசுக்கு, டீ விற்கும், மூர்த்தி செல்வன் ‘மாலை நேரமானால் வடலூர் வள்ளலாரின் ஞானசபை அருகில் உள்ள ஆதரவற்றவர்களுக்கு தினசரி நூறுக்கு குறையாத ஆதரவு அற்றவர்களுக்கு, இலவசமாக டீ வழங்கி வரும் வேலை செய்து வருகிறார்,
பகலில் கொளுத்தும் வெய்யலோ, மழையோ,டீ,வியாபாரம், ஏழ்மை நிலையிலும், வருவாயில் ஒரு பகுதியை தர்மம் செய்யவேண்டும் என்கிற எண்ணத்தில், வள்ளலார் மீது கொண்ட ஈடுபாட்டின் காரணமாக தான் சம்பாதித்த பணத்தின் ஒரு பகுதியை செம்மையாக ஏதோ ஒரு வகையில் நலிந்த மக்களுக்கு உதவி செய்யும் வகையில் மாலை நேரமாக தேர்வு செய்து, ஆதரவற்றவர் களுக்கு, டீ,வழங்கி வருகிறார் தொடர்ந்து இவருடைய விலையில்லா தேநீர் வழங்கும் பணியை பல சன்மார்க்கிகள் பாராட்டி வரும் நிலையில், நாமும் இவரை பாராட்டலாம். அவரை நேரில் பார்த்து வாழ்த்து சொல்ல முடியாதவர்கள், அவரின் கை பேசியில் (+91 96599 11867) ( வாழ்த்தலாமே,)