காரைக்கால் அம்மையார் திருக்கோயிலில் நடைபெற்ற உலகப் புகழ்பெற்ற மாங்கனி திருவிழாவை முன்னிட்டு, தேசிய திருக்கோயில் கூட்டமைப்பு சார்பில் சிறப்பு ஆன்மீக மற்றும் கலாச்சார நிகழ்ச்சி நடைபெற்றது.
நிகழ்ச்சியில், “ஆன்மீகம் ஏன் அவசியம்?” என்ற தலைப்பில் குத்தாலம் ஜே. நடராஜன் அவர்கள் சிறப்பான ஆன்மீக சொற்பொழிவை வழங்கினார். மேலும், பள்ளி மாணவிகளின் பரதநாட்டிய நிகழ்ச்சி அனைவரின் பாராட்டையும் பெற்றது.
அதனைத் தொடர்ந்து, மாணவிகளுக்கிடையே நடைபெற்ற காரைக்கால் அம்மையார் பாடல் ஒப்புவித்தல் போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. மேலும், காரைக்கால் அம்மையார் வேடம் அணிந்து பங்கேற்ற மாணவிகளுக்கும் சிறப்பு பரிசுகள் வழங்கி பாராட்டப்பட்டனர்.
இந்நிகழ்ச்சிக்கு தேசிய திருக்கோயில் கூட்டமைப்பின் காரைக்கால் மாவட்ட தலைவர் வழக்கறிஞர் எஸ். திருமுருகன் அவர்கள் தலைமை வகித்தார்.
நிகழ்ச்சியில், தமிழ்நாடு மாநில தலைவர் என்.டி. கண்ணன், காரைக்கால் மாவட்ட செயலாளர் முனைவர் அசோக்குமார், கோ.சா. சுரேஷ், ஆன்மீக தென்றல் திரு. தெண்டாயுதபாணி, தேசிய திருக்கோயில் கூட்டமைப்பின் அனைத்து பொறுப்பாளர்கள், காரைக்கால் அம்மையார் திருக்கோயில் நிர்வாக அதிகாரி சுப்பிரமணியன், மேலாளர் ஆசைத்தம்பி, பாரீஸ் ரவி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டு நிகழ்ச்சியை சிறப்பித்தனர்.
இறுதியாக, முனைவர் ஜோதி அவர்கள் நன்றி உரையாற்றி நிகழ்ச்சியை நிறைவு செய்தார்.