கும்பகோணத்தில் தனியார் பள்ளியில் கடந்த 2004-ம் ஆண்டு ஜூலை 16-ந் தேதி ஏற்பட்ட தீ விபத்தில் 94 குழந்தைகள் உயிரிழந்தனர். காலை எப்போதும் போலபெற்றோர் தங்கள் குழந்தைகளை தயார் செய்து பள்ளிக்கு அனுப்பினர். ஆனால் அழகாக தயார் செய்து அனுப்பிய தங்கள் குழந்தைகளை, அதன்பிறகு எப்போதுமே பார்க்க முடியாது என அவர்கள் கனவில் கூட நினைத்து பார்த்திருக்க மாட்டார்கள். குழந்தைகள் பள்ளிக்கு சென்ற ஓரிரு மணி நேரங்களிலேயே அங்கு தீ விபத்து ஏற்பட்டது.

தீயில் சிக்கி 94 குழந்தைகள் பரிதாபமாக உயிரிழந்தன. இறந்த குழந்தைகள் அனைவருமே 7 முதல் 11 வயது பலருக்கு தீக்காயம் ஏற்பட் துக்கு உட்பட்டவர்கள் ஆவர். இந்த நிலையில் ஒவ்வொரு ஆண்டும் ஜூலைமாதம் 16-ந் தேதி தீ விபத்தில் உயிரிழந்த 94 குழந்தைகளின் நினைவு |தினம் அனுசரிக்கப்பட்டு வருகிறது. அதன்படி தீ விபத்து நிகழ்ந்த பள்ளி முன் பகுதியில் குழந்தைகளை இழந்த பெற்றோர்கள் சார்பில் நினைவஞ்சலி கூட்டமும், நினைவு சின்னத்திலும்
மலர்வளையம் வைத்து அஞ்சலியும் செலுத்தினர்.

குழந்தைகளின் நினைவு தினத்தை அனுசரிக்கும் வகையில் இறந்த குழந்தைகளின் படங்கள் அடங்கிய டிஜிட் டல் பதாகை சம்பவம் நடந்த பள்ளி முன் வைக்கப்பட்டுள்ளது. இதற்கு பெற்றோர்கள், அரசியல் கட்சியினர்கள், பொதுமக்கள், பள்ளி முன்னாள் மாணவர்கள் உள்ளிட் டோர், மலர் வளையம் வைத்து, மெழுகுவர்த்தி ஏற்றி அஞ்சலி செலுத்தினர். இளம் பிஞ்சுகளை இழந்து 22 ஆண்டுகள் ஆகியும் அந்த சோகம் அழியாத வடுவாக இருப்பதாக பெற்றோர்கள். கண்ணீருடன் கூறினர்.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *