கரூர், ஜூலை 16:
பெருந்தலைவர் காமராஜரின் 125வது பிறந்த நாளை முன்னிட்டு, கரூர் மாவட்ட காங்கிரஸ் கட்சி சார்பில் தாந்தோணி வட்டாரத்திற்குட்பட்ட கோவிந்தம்பாளையத்தில் உள்ள காமராஜர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.
இந்நிகழ்ச்சிக்கு கரூர் மாவட்ட காங்கிரஸ் கட்சியின் முன்னாள் மாவட்டத் தலைவர் பேங்க் சுப்பிரமணியன் தலைமை தாங்கினார். இதில் மாவட்ட துணைத் தலைவர் சின்னையன், ஆர்டிஐ மாநில பொதுச் செயலாளர் ஜிபிஎம் மனோகரன், மாவட்ட செயலாளர் சேகர், சனப்பிரட்டி ஊராட்சி தலைவர் முத்துசாமி, பொருளாளர் செல்வராஜ், வழக்கறிஞர் பிரிவு தலைவர் ரவிச்சந்திரன், ஆட்டோ பாலு, கிராம காங்கிரஸ் கமிட்டி தலைவர் கண்ணையன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டு காமராஜர் சிலைக்கு மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினர்.
விழாவையொட்டி குழந்தைகள் மற்றும் பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கப்பட்டன.