கோவை குனியமுத்தூர் கிழக்கு பகுதி அலுவலகத்தில், பெருந்தலைவர் காமராஜர் அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு சிறப்பு நிகழ்ச்சி நடைபெற்றது. இதில், கோவை யு.எம்.டி. ராஜா அண்ணா அவர்கள் கலந்துகொண்டு, பெருந்தலைவர் காமராஜரின் உன்னதமான கொள்கைகளையும் அவரின் வரலாற்றுச் சாதனைகளையும் அனைவரையும் வியக்க வைக்கும் வகையில் தலைகீழாக எழுதி (Mirror Writing) சாதனை படைத்து அஞ்சலி செலுத்தினார்.
இந்தச் சிறப்பான நிகழ்வில், குனியமுத்தூர் கிழக்குப் பகுதி கழகச் செயலாளர் செந்தில்குமார், 88-வது வார்டு செயலாளர் செந்தில், 93-வது வார்டு செயலாளர் பிரவீன், பகுதி இணைச் செயலாளர் ராம், சர்க்கார் சந்தோஷ் மற்றும் பகுதி நிர்வாகிகள், கழகத் தோழர்கள் எனப் பலரும் திரளாகக் கலந்துகொண்டு சிறப்பித்தனர்.