கடலூர் ஜூலை 16,

கடலூர் மாவட்டம், பெரியப்பட்டு கிராமத்தை அடுத்த மேட்டுப்பாளையம் பகுதியில் இன்று கோர சாலை விபத்து ஏற்பட்டது.

தேசிய நெடுஞ்சாலையின் தடுப்புகளில் உள்ள செடிகளுக்கு தண்ணீர் ஊற்றிக் கொண்டிருந்த டேங்கர் லாரியின் மீது, அதிவேகமாக வந்த கார் கட்டுப்பாட்டை இழந்து பலத்த வேகத்தில் மோதியது.

இந்த விபத்தில் காரில் பயணம் செய்த ஒருவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.

தகவல் அறிந்து புதுச்சத்திரம் போலீசார் உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து உயிரிழந்தவரின் உடலை மீட்டு பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும், விபத்துக்கான காரணம் குறித்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *