கல்பாக்கம் நாடார் நலச் சங்கம் சார்பில் பெருந்தலைவர் காமராசர் பிறந்த நாள் விழா
கல்பாக்கம்
செங்கல்பட்டு மாவட்டம் கல்பாக்கம் அடுத்த புதுப்பட்டினம் பகுதியில் நாடார் நலச் சங்கம் (கல்பாக்கம் வட்டாரம்) சார்பில் முன்னாள் முதலமைச்சர் கர்ம வீரர் காமராசர் அவர்களின் 124 ஆவது பிறந்தநாள் விழா சங்க கட்டடத்தில் வெகு சிறப்பாகக் கொண்டாடப்பட்டது சங்க தலைவர் எஸ் பட்டுராஜ் நாடார் தலைமை தாங்கினார் சங்க செயலாளர் ஏ சீனிவாசன் பொருளாளர் எஸ் வெற்றி முருகன் மற்றும் செயற்குழு உறுப்பினர்கள் முன்னிலை வகித்தனர்
நிகழ்ச்சியில் தமிழகத்தில் சிறப்பான ஆட்சி தந்த முன்னாள் முதலமைச்சர் காமராசர் திருவருவப் படத்துக்கு மாலையணிவித்து மலர் தூவி மரியாதை செய்தனர் சங்க தலைவர் பட்ராஜ் நாடார் பேசும்போது கர்ம வீரர் காமராசர் தனது ஆட்சிக் காலத்தில் தமிழகம் எங்கும் புதிய பள்ளிக்கூடங்கள் தொழிற்சாலைகள் அணைக்கட்டுகள் ஏற்படுத்தி நல்லாட்சி புரிந்தார் அவரது சமூக நற்பணிகளை மாணவர்கள் நன்கு புரிந்து கொண்டு வாழ்வில் சிறப்புற வேண்டும் என்றார்
இந்த நிகழ்ச்சியில் 10 மற்றும் 12 ஆம் வகுப்பில் முதல் 3 இடம் பிடித்த மாணவர்கள் 12 பேருக்கு ஊக்கத்தொகை வழங்கப்பட்டது அது போல பாவலரேறு தமிழ் வழி மழலையர் மற்றும் தொடக்கப் பள்ளி மாணவர்கள் 64 பேருக்கு சீருடைகள் நோட்டுப்புத்தகம் எழுதுபொருள்கள் வழங்கப்பட்டது இதில் சங்க உறுப்பினர்கள் பள்ளி ஆசிரியர்கள் மாணவர்கள் பொதுமக்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்