தருமபுரி அடுத்த பருத்திநத்தம் பாப்பாரப்பட்டி மாரியம்மன் கோவில் திருவிழாவை, கார ஓணி, முக்கலநாயக்கம்பட்டி, கீழ்ராஜா தோப்பு, நூலஅள்ளி, கொல்லப்பட்டி, அன்னசாகரம் உள்ளிட்ட கிராம மக்கள் ஒன்றிணைந்து திருவிழாவின் கொடியேற்றம் நேற்று முன்தினம் தொடங்கியது. அந்போது நேர்த்திக்கடன் செலுத்தும் பக்தர்கள் கங்கணம் கட்டிக்கொண்டு விரதம் இருந்தனர்.
இன்று ஆடிப் பண்டிகையொட்டி காலை பாப்பாரப்பட்டி அம்மன் கோயிலில் அம்மனுக்கு சிறப்பு அலங்காரம் பூஜைகள் நடைபெற்றது. இதனை தொடர்ந்து கங்களும் கட்டிய பக்தர்களுக்கு சக்தி அழைத்து, ஆண்கள் பெண்கள் கரகம், தீச்சட்டி எடுத்தும், முதுகில் அலகு குத்தி கொண்டு அந்தரத்தில் தொங்கிவாரு ஊர்வலமாக வந்து தங்களது நேர்த்திக்கடன்களை செலுத்தினார்.
மேலும் அம்மன் கோயில் அருகில் ஏராளமான பக்தர்கள் ஆடு, கோழி பலியிட்டு தங்களது நேர்த்திக்கடன்களை செலுத்தி, சாமி தரிசனம் செய்து வழிபட்டனர். மேலும் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த ஆயிரக்கணக்கான மக்கள் திரண்டு சாமி தரிசனம் செய்து வழிபட்டனர்.