திண்டுக்கல் மாவட்டம்
கொடைக்கானல் வடகவுஞ்சி உட்கடை கருவேலம்பட்டி பழங்குடியினர் கிராமத்தில் 150 க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர்.இப்பகுதியில் வாழும் மலைவாழ் பழங்குடியின மக்கள் பல ஆண்டுகளாக சாலை வசதி, அடிப்படை வசதிகள் வேண்டியும் மாவட்ட ஆட்சியர் அலுவலகம், அமைச்சர்கள், சட்டமன்ற உறுப்பினர், கோட்டாட்சியர், ஊராட்சி ஒன்றிய ஆணையர், கிராம சபை,மக்கள் தொடர்பு முகாம் என மனுக்கொடுத்தும், ஊடகங்கள் மூலமாக கோரிக்கை வைத்தும் இதுவரை எவ்வித நடவடிக்கை எடுக்கப்படாதால் கடந்த நாடாளுமன்ற தேர்தல் புறக்கணித்து பழங்குடி மக்கள் வாக்களிக்கவில்லை. தற்போது நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தல் புறக்கணிப்பு என மக்கள் அறிவித்து ஊடகம், சமூக வலைத்தளங்களில் பதிவு செய்தனர்,
இதனால் த.வெ.க, தி. மு. க., அ. தி. மு. க. கட்சிகளின் பிரதிநிதிகள் கேட்டுக் கொண்டதால் தேர்தலில் வாக்களித்தனர்.
இப்பகுதி மக்களின் கோரிக்கைகள் நிறை வேற்றப் படவில்லை. தற்போது புதிதாக பொறுப்பேற்றுள்ள தவெக அரசும், புதிய திண்டுக்கல் மாவட்ட ஆட்சியரும் கருவேலம்பட்டி கிராமத்திற்கு சாலை,பாலம், குடிநீர், பள்ளிக்கு தடுப்புச்சுவர்,புதிய வீடுகள், துணை சுகாதார நிலையம், உள்ளிட்ட அடிப்படைத்தேவைகளை நிறைவேற்றி தர வேண்டி மாவட்ட ஆட்சியர் அவர்களிடம் 50க்கும் மேற்பட்ட பழங்குடியின மக்கள் தாங்கள் பாரம்பரிய உணவாக பயன்படுத்தும் பளிவிக்கீரை, மாவளிக்கிழங்கு, Extraordinary, மூங்கில் குருத்து, தேன்,மூலிகை வகைகளை கையில் ஏந்தி மாவட்ட ஆட்சியரிடம் கோரிக்கை மனு அளித்துள்ளனர்.