கோவை: தமிழக வெற்றிக் கழகத்தின் பொதுச்செயலாளரும், ஊரக வளர்ச்சி மற்றும் நீர்வளத்துறை அமைச்சருமான என். ஆனந்த் பிறந்தநாளை முன்னிட்டு, கோவை புறநகர் கிழக்கு மாவட்ட தமிழக வெற்றிக் கழகம் சார்பில் ஜங்கிலிபீர் தர்காவில் சிறப்பு பிரார்த்தனை நடைபெற்றது.
மாவட்ட செயலாளர் பாபு தலைமையில் நடைபெற்ற நிகழ்ச்சியில், ஏழை மற்றும் எளிய குடும்பங்களைச் சேர்ந்த பெண்களுக்கு புடவைகள், இனிப்புகள் உள்ளிட்ட நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன. இதில் மாவட்ட நிர்வாகிகள், தொண்டர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டு அமைச்சர் என். ஆனந்துக்கு பிறந்தநாள் வாழ்த்துகளை தெரிவித்தனர்.
நிகழ்ச்சியில், ஆட்டோ ஓட்டுநராக வாழ்க்கையைத் தொடங்கி, மக்கள் சேவையின் மூலம் தமிழக வெற்றிக் கழகத்தின் கோவை புறநகர் கிழக்கு மாவட்ட செயலாளராக உயர்ந்துள்ள பாபுவின் அரசியல் பயணம் பலரது கவனத்தையும் ஈர்த்தது