சின்னமனூர் ஊராட்சி ஒன்றியத்தில் ரூபாய் 3.91 கோடி மதிப்பீட்டில் மேற்கொள்ளப்பட்டு வரும் வளர்ச்சி திட்டப் பணிகளை மாவட்ட ஆட்சியர் ஆய்வு
தேனி மாவட்டம் சின்னமனூர் ஊராட்சி ஒன்றியத்தில் வெள்ளிக்கிழமை ஊரக வளர்ச்சித் துறையின் மூலம் மேற்கொள்ளப்பட்டு வரும் வளர்ச்சி திட்டப் பணிகளை மாவட்ட ஆட்சியர் ஆய்வு தேனி மாவட்டம் சின்னமனூர் ஊராட்சி ஒன்றியம் காமாட்சிபுரம் ஊராட்சி உட்கடை கிராமமான சுக்காங்கல்பட்டி ஊராட்சியில் முல்லைப் பெரியாற்றிலிருந்து தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியம் மூலம் இந்த பகுதிக்கு குடிநீர் கொண்டு செல்ல ரூபாய் 1 கோடியே 91 இலட்சம் மதிப்பீட்டில் குடிநீர் குழாய் இணைக்கும் பணி நடைபெற்று வருவதை பார்வையிட்டு குடிநீர் குழாயின் தரத்தன்மை குறித்து ஆய்வு செய்து பணிகளை விரைந்து முடிக்குமாறு அலுவலர்களுக்கு மாவட்ட ஆட்சியர் அறிவுறுத்தினார்
இதனைத் தொடர்ந்து வேப்பம்பட்டி ஊராட்சியில் ரூபாய் 3 இலட்சத்து 38.000. மதீப்பீட்டில் நீர்த்தேக்கத் தொட்டி சீரமைப்பு பணி மேற்கொள்ளப்பட்டு முடிவுற்றுள்ளதை பார்வையிட்டு ஆய்வு செய்தார். மேலும் அப்பகுதியில் ரூபாய் 30 இலட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள அலுவலக கட்டடத்தினை ஆய்வு செய்தார் . மேலும் வேப்பம்பட்டி ஊராட்சி காளியம்மன் கோவில் முதல் ரங்கசாமி தோட்டம் வரை ரூபாய் 99 இலட்சத்து 50.000 மதீப்பீட்டில் சாலை அமைக்கும் பணி அழகாபுரி ஊராட்சி கரிச்சிப்பட்டி கிராமத்தில் ரூபாய் 30 இலட்சம் மதிப்பீட்டில் கூடுதல் வகுப்பறைக் கட்டிடம் கட்டப்பட்டு வருவதையும் அழகாபுரி ஊராட்சியில் ரூபாய் 31 இலட்சத்து 40.000 மதீப்பீட்டில் ஊராட்சி அலுவலக கட்டிடம் கட்டப்பட்டு வருவதை மாவட்ட ஆட்சியர் இரா.வைத்திநாதன் நேரில் பார்வையிட்டு செய்தார் ஆய்வு செய்தார்.
இந்த ஆய்வில் சின்னமனூர் ஊராட்சி ஒன்றிய வட்டார வளர்ச்சி அலுவலர்கள் ஆண்டாள் முருகேஸ்வரி உதவிப் பொறியாளர் உமா மகேஸ்வரி ஊராட்சி செயலர்கள் வேப்பம்பட்டி செல்வம் காமாட்சிபுரம் ஜி. காளான் அழகாபுரி எஸ்.எஸ்.கர்ணன் மற்றும் அரசு அலுவலர்கள் பலர் உடனிருந்தனர்