.


கம்பம் ஜூலை 19. தேனி மாவட்டம் கம்பம்
இலாஹி பள்ளி முன்னாள் மாணவர்கள் அறக்கட்டளை சார்பில் நான்காம் ஆண்டு ரத்ததான முகாம் கம்பம் சிக்னல் அருகில் நடைபெற்றது. முகாமிற்கு நகராட்சி நகர்மன்ற தலைவர் வனிதா நெப்போலியன் தலைமை வகித்தார்.

இரத்ததான முகாமை தேனி எம்பி தங்க தமிழ்ச்செல்வன் தொடங்கி வைத்து இரத்ததானம் வழங்கியவர்களுக்கு சிறப்பு பரிசுகளை வழங்கினார் இந்த நிகழ்ச்சியில் 80க்கும் மேற்பட்டோர் ரத்த தானம் செய்தனர். நிகழ்ச்சிக்கு அறக்கட்டளை தலைவர் சையது சுல்தான் இப்ராஹிம், செயலாளர் பக்கீர் மைதீன், பொருளாளர் உதுமான் அலி, மற்றும் நிர்வாகிகள் சிராஜுதீன், இப்ராஹிம் ஷா,ஹம்சா முபாரக் , ஹக்கீம். கம்பம் வாவேர் பள்ளிவாசல் ஜமாத் தலைவர் ஜைனுல் ஆபிதீன், துணைத் தலைவர் அப்துல் சமது, மூத்த வழக்கறிஞர் துரை. நெப்போலியன்,இலாஹி ஓரியண்டல் பள்ளி தாளாளர்முகமது ஸயீது ஹனபி, பள்ளி செயலாளர் சலீம், இந்திய யூனியன் முஸ்லிம்லீக் மாவட்டத் தலைவர் டெல்லி ஹால் சாகுல் ஹமீது, திமுக மாவட்ட இலக்கிய அணி அமைப்பாளர் டிஸ்கோ அலாவுதீன், கம்பம் அரசு மருத்துவமனை தலைமை மருத்துவர் பானுமதி பெரியகுளம் அரசு மருத்துவமனை இரத்த மையத்தின் தலைமை மருத்துவர் பாரதி, மயக்கவியல் மருத்துவர் அழகர்சாமி, காமய கவுண்டன்பட்டி அரசு ஆரம்ப சுகாதார நிலைய சித்த மருத்துவர் சிராஜுதீன், நகர் மன்ற உறுப்பினர்கள் கம்பம் சாதிக் மற்றும் தீன், மனிதநேய மக்கள் கட்சியின் மாவட்ட செயலாளர் அப்பாஸ் மந்திரி,இ. யூ. மு. லீ. நகரத் தலைவர் சேட், எஸ்டிபிஐ நகரத் தலைவர் சிராஜுதீன், மற்றும் பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர். அறக்கட்டளை துணைத் தலைவர் சம்சுல் ஹுதா நன்றி உரையாற்றினார்.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *