கும்பகோணம் ஸ்ரீ அபிநயாஸ் கலைக் குழுமத்தின் சார்பில் பரதநாட்டிய அரங்கேற்ற விழா ஹரிதா மஹாலில் வெகு விமர்சையாக நடைபெற்றது.

ஸ்ரீ அபிநயாஸ் கலைக் குழுமத்தின் அபிநயா,அபிசங்கல்யா, ஹேமவர்ஷினி, அனுதர்ஷிகா,ஆகிய மாணவிகளுக்கு முறைப்படி சலங்கை அணிவிக்கப்பட்டது

நடன நிகழ்ச்சிக்கு விஜயமாலதியின் நட்டு வாங்கம் , திருகண்ணபுரம் சங்கரின் வாய்ப்பாட்டு, கங்காதர சந்திரனின் செந்திலின் மிருதங்கம், ரவியின் புல்லாங்குழல் ,சரவணன் வயலின் ஆகியவற்றுக்குபரத நாட்டிய மாணவ, மாணவிகள்தாண்டவ கணபதி,தேவாரம் ,வர்ணம்,தில்லானா,மாடு மேய்க்கும் கண்ணா,குறத்தி,நாதர் முடி போன்ற பாடல்களுக்கு
நடனமாடி திறமை வெளிப்படுத்தினர்.

விழாவிற்கு சிறப்பு அழைப்பாளராககும்பகோணம் துணைமேயர் சு.ப.தமிழழகன், ஸ்ரீ சரஸ்வதி பாடசாலை பெண்கள் மேல்நிலைப்பள்ளி,தலைமை ஆசிரியர் லதா அம்பலவாணன், தமிழக பண்பாட்டுக் கழகம், மாநில தலைவர் எஸ் என் ஜாகிர் உசேன்,டாக்டர் எஸ் ஆலிவர்
ஆகியோர் கலந்துகொண்டு வாழ்த்துரை வழங்கி மாணவிகளுக்கு விருது மற்றும் நினைவு பரிசு வழங்கினார்கள்.முன்னதாக நவநீதகிருஷ்ணன்வரவேற்றார்.
நிறைவில் அபிநயாஸ் அக்கறைக் குழு நிறுவனர் நரேஷ் நன்றி கூறினார்

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *