வடலூர், ஜூலை.20-
கடலூர் மாவட்டம் குறிஞ்சிப்பாடிஅருகே உள்ள சமத்துவபுரத்தைச் சேர்ந்தவர் சாமிதுரை இவருடைய மகன்கள் ஏழுமலை, கார்த்தி, தங்கதுரை ஆகிய மூன்று மகன்கள் உள்ளனர் இவர்கள் அனைவரும் கட்டிட தொழிலாளிகள் ஆவார்கள். அதே பகுதியைச் சேர்ந்தவீரமணியும், தங்கதுரையும் இன்று ஓய்வாக இருந்தால் மது குடித்துக் கொண்டிருந்தனர்
இந்த நிலையில் தங்கதுரையின் அண்ணனான ஏழுமலையும் கார்த்தியும் அங்கு வந்தனர் அவர்களும் மது அருந்திவிட்டுஅனைவரும்வீட்டுக்கு சென்றுவிட்டதாக, கூறப்படுகிறது,இந்த நிலையில் வீரமணிக்கும்ஏழுமலைக்கும் முன்விரோதம் இருந்து வந்த நிலையில், ஏழுமலை வீட்டுக்குச் சென்ற பின் சற்று நேரம் கழித்து வீரமணி. ஏழுமலையை தேடிசென்ற போது,ஏழுமலை வீட்டில் இல்லை அங்கு அங்கிருந்த, தங்கதுரை மற்றும் கார்த்தி,ஆகியோர்களிடம் வீரமணி தகராறு செய்தார் ஆத்திரமடைந்த வீரமணி தங்கத்துரையின் கழுத்தில் கத்தியால் குத்தி விட்டார் இதில் ரத்த வெள்ளத்தில் மிதந்த தங்கதுரை அதே இடத்தில் துடிதுடித்து இறந்து போனார்
இது குறித்து தகவல் அறிந்த வடலூர் போலீசார் மற்றும் நெய்வேலி டிஎஸ்பி ராதாகிருஷ்ணன் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை மேற்கொண்டு பிரேதத்தைகைப்பற்றி சிதம்பர அண்ணாமலை பல்கலைக்கழக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். சம்பவ இடத்திற்கு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு வந்து விசாரணை மேற்கொண்டார்,குற்றவாளியை பிடிக்க நான்கு தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது