புதுச்சேரி,
இந்திய அரசு, தேசிய சுகாதார இயக்கம் (NHM) திட்டத்தின் கீழ், ஆயுஷ்மான் ஆரோக்கிய மந்திர் (AAM) முன்னெடுப்பின் மூலம் தடுப்பு மற்றும் மேம்பாட்டு சுகாதாரத்தை ஊக்குவிக்கும் வகையில் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.
இதன் ஒரு பகுதியாக, ஃபிட் இந்தியா இயக்கம் மற்றும் தேசிய சுகாதார இயக்கம் (NHM) இணைந்து, “ஆயுஷ்மான் ஆரோக்கிய மந்திர்கள்” என்ற கருப்பொருளில் “சண்டேஸ் ஆன் சைக்கிள்” பிரச்சாரத்தின் சிறப்புப் பதிப்பை ஜூலை 19, 2026 அன்று நாடு முழுவதும் நடத்தின.
இந்தப் பிரச்சாரத்தின் மூலம் உடல் செயல்பாடு, தடுப்பு சுகாதாரப் பராமரிப்பு, ஆரோக்கியமான வாழ்க்கை முறை மற்றும் சமூகப் பங்கேற்பு ஆகியவற்றை ஊக்குவிப்பதே நோக்கமாகும். நாடு முழுவதும் உள்ள ஆயுஷ்மான் ஆரோக்கிய மந்திர்களின் விரிவான வலையமைப்பை பயன்படுத்தி, பொதுமக்களிடையே ஆரோக்கியமான வாழ்க்கை முறையை உருவாக்கும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன.
இதையொட்டி, அனைத்து ஆயுஷ்மான் ஆரோக்கிய மந்திர்கள் மற்றும் பிற பொது சுகாதார நிலையங்கள் தீவிரமாக பங்கேற்குமாறு அறிவுறுத்தப்பட்டிருந்தன. மிதிவண்டிப் பயணங்கள் மற்றும் உடற்பயிற்சி சார்ந்த நிகழ்ச்சிகளை ஏற்பாடு செய்து, சுகாதாரப் பணியாளர்கள் மற்றும் பொதுமக்களின் பங்கேற்பை உறுதி செய்யுமாறு கேட்டுக்கொள்ளப்பட்டது.
மேலும், நிகழ்வை சீராக ஒருங்கிணைப்பதற்காக இந்திய விளையாட்டு ஆணையத்தின் மண்டல மையங்களுடன் மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்கள் இணைந்து செயல்படவும் அறிவுறுத்தப்பட்டது.
ஆயுஷ்மான் ஆரோக்கிய மந்திர்கள் மூலம் சமூக அளவில் ஆரோக்கியம், உடற்பயிற்சி மற்றும் நல்வாழ்வை மேம்படுத்தும் இந்த முன்னெடுப்பு, திடகாத்திரமான, ஆரோக்கியமான மற்றும் வளர்ச்சியடைந்த இந்தியாவை உருவாக்குவதற்கான கூட்டு முயற்சியாக அமைந்துள்ளது.
மேலும் இந்நிகழ்ச்சிலாஸ்பேட்டை சுகாதார மையத்திலிருந்து நடைபெற்றது. மருத்துவர்கள் டாக்டர் பத்மினி, டாக்டர் சிந்துஜா பிரியா, டாக்டர் ரொமேனோ எல்.எச்.வி. ராதா முத்து, ஏ.என்.எம். விஜயலட்சுமி, ஜீனத் பேகம் மற்றும் அஸ்ஹாஸ்.
மற்றும் NHM ஊழியர்கள் கலந்து கொண்டனர்.